Published : 07 Apr 2014 12:00 AM
Last Updated : 07 Apr 2014 12:00 AM
மக்களவைத் தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடாத நிலையில் கட்சியின் தலைவர் சரத்குமார் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். சென்னையில் வாக்கு வேட்டையாடிய அவரை ‘தி இந்து’ சார்பில் சந்தித்தோம். பிரச்சார வாகனத்தில் இருந்தபடியே பேட்டி யளித்தார்.
அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?
ஊழல்கள் நிறைந்த காங்கிரஸ் ஆட்சியும் அதில் 9 ஆண்டுகள் பங்கெடுத்த திமுகவும் பதவி சுகத்தை மட்டுமே அனுபவித்ததே தவிர தமிழகத்துக்கு எதுவும் செய்யவில்லை. காங்கிரஸ், திமுக தேர்தலில் வெற்றி பெற வாய்ப்பில்லை. பாஜக கூட்டணி சந்தர்ப்ப வாத கூட்டணி. அது வலுவான கூட்டணி அல்ல. கம்யூனிஸ்ட்டுகள் தனித்துப் போட்டியிடுகிறார்கள். அவர்கள் பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை. மாநிலக் கட்சி வெற்றி பெற்றால்தான், மத்திய ஆட்சியில் அங்கம் வகித்தால்தானே மாநில தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும்.
அதிமுக-வுக்கு ஆதரவாக எதை முன்நிறுத்தி வாக்கு சேகரிக்கிறீர்கள்?
காவிரி பிரச்சினை, முல்லை பெரியாறு, தமிழக மீனவர் பிரச்சினை உள்ளிட்டவற்றை தீர்க்க மத்தியில் அங்கம் வகித்தால்தான் மாநிலத்துக்கான திட்டங்களை செயல்படுத்த முடியும். அதற்காக அதிமுகவுக்கு வாக்களிக்கக் கோரி பிரச்சாரம் செய்கிறேன்.
சீட் கிடைக்காத அதிருப்தியில் அதிமுகவுக்கு ஆதரவான பிரச்சாரத்தை ரத்து செய்ததாகக் கூறப்படுகிறதே?
அது தவறான கருத்து. இதை சொன்னவர்கள், மருத்துவர் மோகன் காமேஸ்வரனிடம், எனக்கு தொண்டை தொற்று ஏற்பட்டதா, இல்லையா என்பதை கேட்டு தெரிந்து கொள்ளட்டும்.
தென் மாவட்டங்களில் நிலவும் மின் வெட்டு, அதிமுகவின் வெற்றி வாய்ப்பை பாதிக்காதா?
திமுக ஆட்சியில் தொலை நோக்கு திட்டங்கள் செயல்படுத்தப்படாததுதான், தற்போதைய மின் வெட்டுக்கு காரணம். அதனை சரி செய்து, மின் மிகை மாநிலமாக தமிழகத்தை மாற்ற முதல்வர் நட வடிக்கை மேற்கொண்டு வருகிறார். மின்வெட்டு வெற்றியைப் பாதிக் காது.
மோசமான சாலை, கழிவுநீர் கலந்த குடிநீர் உள்ளிட்ட பிரச்சினை களால் சென்னையில் அதிமுக வின் வெற்றி பாதிக்கும் எனக் கூறப்படுகிறதே?
தற்போது நடப்பது நாடாளுமன்ற தேர்தல். கவுன்சிலர், எம்எல்ஏ தீர்க்க வேண்டிய பிரச்சினைகளை திமுக பிரச்சாரம் செய்கிறது.
உங்களையும், உங்கள் கட்சியி னரையும் அதிமுக மதிக்கவில்லை எனக்கூறி நெல்லையில் போட்டி யிடப்போவதாக உங்கள் கட்சி யின் மாவட்டச் செயலர் சுந்தர ராஜ் பேட்டி அளித்தாரே?
யாரோ சிலரின் சொல்படி அவசரப்பட்டு தவறாக பேட்டி அளித்துவிட்டதாக அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இத்தேர்தலில் போட்டியிட உங்கள் கட்சிக்கு அதிமுக வாய்ப்பு அளிக்கும் என்று எதிர்பார்த்தீர்களா?
எதிர்பார்ப்பு எல்லோருக்கும் இருப்பது இயல்புதானே? வாய்ப்பு கிட்டாததால் வருத்தப்படவில்லை. கூட்டணி தர்மத்தின்படி, அதிமுகவுக் காக பிரச்சாரம் செய்கிறேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT