Published : 24 Apr 2014 08:26 AM
Last Updated : 24 Apr 2014 08:26 AM
வாக்குப்பதிவு நாளில், மற்ற கட்சி வேட்பாளர்களுக்கு சாதகமாக செயல்பட்டு விடக்கூடாது என்று திமுக, அதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தங்க ளின் பூத் ஏஜென்ட்களுக்கு கட்டுப்பாடு விதித்துள்ளனர்.
திமுக, அதிமுக ஆகிய கட்சி ஆதரவாளர்கள் பலர், சுயேச்சைக ளாகவும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இவர்களின் பூத் ஏஜென்ட்கள் பெரும்பாலும் தங்க ளது ஆதரவு கட்சிகளுக்கு சாதக மாக செயல்படுவதுதான் கடந்த கால தேர்தல் வரலாறாகும். இந் நிலையில், பூத் ஏஜென்ட்கள் வேறு கட்சிக்கு சாதகமாக செயல்பட்டு விடக்கூடாது என்பதற்காக திமுக, அதிமுக நிர்வாகிகள் தங்கள் ஏஜென்ட்களுக்கு பல்வேறு உத் தரவுகளைப் பிறப்பித்துள்ளனர்.
வாக்காளர்கள் பட்டியலை சரியாகக் கவனிக்க வேண்டும். கள்ள ஓட்டுகளை அனுமதித்து விடக்கூடாது. எதிர்க்கட்சிகள் முறைகேட்டில் ஈடுபட்டால், உடன டியாக தேர்தல் அதிகாரிகளிட மும், கட்சித் தலைமைக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும்.
எதிர்க்கட்சி ஏஜென்ட் களின் ஆசை வார்த்தைகளில் விழுந்து, கட்சிக்கு துரோகம் செய்து விடக்கூடாது என்று பல்வேறு கட்டளைகள் பிறப்பிக் கப்பட்டுள்ளன.
இதேபோல், பூத் ஏஜென்ட்கள் மற்ற கட்சியினரிடம் பணமோ, பரிசோ பெறக்கூடாது. உணவு வாங்கி சாப்பிடக் கூடாது என்றும் திமுக, அதிமுக கட்சி நிர்வாகிகள் தங்கள் ஏஜென்ட்களுக்கு கட்டுப் பாடுகள் விதித்துள்ளனர்.
அதேநேரம், சுயேச்சை ஏஜென்ட்களை தங்களுக்கு சாதக மாக்க, சில வேட்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். ஆனால், மற்ற கட்சி ஏஜென்ட்களோ, சுயேச்சை ஏஜென்ட்களோ வேறு கட்சி களுக்கு ஆதரவாக செயல்படு வதைத் தடுக்க வேண்டுமென்று, திமுக, அதிமுக ஏஜென்ட்களுக்கு அக்கட்சிகளின் தலைமை உத்தரவிட்டுள்ளன.
சில இடங்களில் காங்கிரஸ் மற்றும் சுயேச்சைகளின் பூத் ஏஜென்ட்களை தங்கள் பக்கம் கொண்டு வர, திமுக, அதிமுக கட்சி நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சிலர் தெரிவித்தனர்.
ஆனால், இம்முறை வெற்றி, தோல்வியை மீறி, வாக்கு சதவீதத்தை காட்ட வேண்டிய கட்டாயத்தில் காங் கிரஸ் இருப்பதால், காங்கிரஸ் ஏஜென்ட்கள் தங்களுக்கு விழும் வாக்குகளை சிதறடிக்கும் வகை யில் செயல்பட்டு விடக்கூடாது, எந்த பெரிய கட்சியின் வலையி லும் விழுந்து விடக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரி வித்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT