Published : 07 Apr 2014 09:45 AM
Last Updated : 07 Apr 2014 09:45 AM

ஊழலைத் தடுக்க மோடி பிரதமராக வேண்டும்: ப.வேலூரில் விஜயகாந்த் பேச்சு

நாட்டில் ஊழலைத் தடுக்க நரேந்திர மோடி பிரதமராக வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.

நாமக்கல் மாவட்டம், ப.வேலூரில் நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதி தேமுதிக வேட்பாளர் எஸ்.கே.வேலுவை ஆதரித்து அவர் பேசியது:

தமிழகத்தில் ஊழலைத் தடுக்க நாம் இருக்கிறோம். இந்தியாவில் ஊழலைத் தடுக்க நல்லவர் தேவை. எனவே, மோடியைப் பிரதமராக்க கூட்டணி அமைத்துள்ளோம். இந்தக் கூட்டணிக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

ப.வேலூர் பகுதியில் வெற்றிலை சாகுபடி அதிகம். இங்கிருந்து வெளி மாநிலங் களுக்கு வெற்றிலை அனுப்பப் படுகிறது.

வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டுமென்ற கோரிக்கையை அதிமுக, திமுக-வினர் கண்டு கொள்ளவில்லை. வெற்றிலை சாகுபடிக்குத் தேவையான தண்ணீரும் இல்லை.

ராஜவாய்க்காலைச் சீரமைக் குமாறு 50 ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மோகனூர் சர்க்கரை ஆலைக் கழிவுநீர் வாய்க்கால்களில் செல்வதால், பயிர்கள் சேதமடைகின்றன.

நாமக்கல்லில் முட்டைகளைப் பாதுகாக்க குளிர்பதனக் கிடங்கு அமைக்க வேண்டுமென்ற கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை.

திமுக-வைச் சேர்ந்த நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர், தொகுதிக்கும், மக்கள் நலனுக்கும் எதுவுமே செய்ய வில்லை. ப.வேலூர் அரசு மருத்துவமனையில் 24 மணி நேர தீவிர சிகிச்சை மையம் இல்லை.

ஐந்து முறை முதல்வராக இருந்த கருணாநிதியும், மூன்றா வது முறையாக முதல்வர் பதவி வகிக்கும் ஜெயலலிதாவும் மக்களுக்கு எதுவுமே செய்ய வில்லை. சிறையிலிருந்து ஜாமீனில் வந்துள்ள ராஜாவுக்கு, தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கொடுத்துள்ளனர்.

தேமுதிக வேட்பாளர் வெற்றி பெற்றால் ப.வேலூரில் தண்ணீர்ப் பிரச்சினை தீர்க்கப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x