Published : 10 Apr 2014 12:00 AM
Last Updated : 10 Apr 2014 12:00 AM
இடம்: திருச்சி நீதிமன்ற வளாக வாசல். ‘உங்கள் பெயருக்கு நட்சத்திரம், ராசி பார்க்கப்படும். கைரேகை ஜோசியம்’ என்று போர்டு வைத்து உட்கார்ந்திருக்கிறார் ஜோசியர். ஆர்வத்துடன் வருகின்றனர் பா.ஜ.க. தொண்டர்கள்.
‘‘ஜக்கம்மா நல்ல வாக்கு சொல்லுவா. இஷ்டத்துக்கு கேளுங்க. கஷ்டத்தப் போக்குவா.’’
‘‘கல்யாணம், படிப்பு, வேலையப் பத்தி மட்டும்தான் கேக்கணுமா?’’
‘‘கலர் கலரா துண்டு போட்டு வந்திருக்கீங்க. பாலிடிக்ஸ் வேணாலும் கேளுங்க. பளிச்சுனு சொல்லுவா ஜக்கம்மா’’
(ஜோசியர் முன்பு அமர்கின்றனர் பாஜக தொண்டர்கள். சோழிகளை உருட்டிப் போட்ட ஜோசியர், அடுக்கி வைத்திருக்கும் சீட்டுகளை ‘ரம்மி’ போல கலைக்கிறார். ‘அது நடக்குமா?’ என்று மனதில் நினைத்தபடி சீட்டை எடுக்கிறார் ஒரு தொண்டர். ‘எது’ என்று சின்னப்புள்ளத்தனமாக கேட்கக்கூடாது. தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் பிஜேபி தொண்டர்கள் வேறு எதை எதிர்பார்க்கப்போகிறார்கள்.)
‘‘அழகான சீட்டு, அம்சமான சீட்டு. உங்களுக்கு ராசியான சீட்டை இதோ ஜக்கம்மா எடுத்துக் கொடுத்துட்டா’’
(அதில் இயேசுநாதர் படம் இருக்கிறது)
‘‘என்னடா மாப்புள. இயேசு வர்றாரு’’
‘‘அட ஃபீல் பண்ணாத மாமா. நம்ம தலைவருக்குத்தான் எம்மதமும் சம்மதம்தானே. அதான், இயேசுவே வந்துட்டாரு. சரி, அது நடக்குமானு நெனச்சு நீ ஒரு சீட்டு எடுத்துப் பாரேன்’’
(இன்னொரு தொண்டர் எடுக்கிறார்)
‘‘இன்னொரு தம்பிக்கு அழகான சீட்டு, அம்சமான சீட்டு. உங்களுக்கு ராசியான சீட்டை இதோ ஜக்கம்மா எடுத்துக் கொடுத்துட்டா’’
(இதில் வந்தது நயன்தாரா படம்).
‘‘என்ன மாமா.. சம்பந்தமே இல்லாம நயன்தாரா படமெல்லாம் வருது’’
‘‘சரி, இன்னும் ஒண்ணு மட்டும் எடுத்துப் பாத்துடலாம்.. சோழி உருட்டுங்க ஜோசியரே’’
‘‘மூணாவது தம்பிக்கு அழகான சீட்டு, அம்சமான சீட்டு. உங்களுக்கு ராசியான சீட்டை இதோ ஜக்கம்மா எடுத்துக் கொடுத்துட்டா’’
(மணக்கோலத்தில் இருக்கும் முருகன் - தெய்வானை படம் வருகிறது)
‘‘ஜக்கம்மா சரியில்ல. மாத்தி மாத்தி குழப்புறா. அப்புறமா வந்து கேட்டுக்கலாம். வாங்கடா போலாம்’’
(தலைக்கு ரூ.10 கொடுத்துவிட்டு நடையைக் கட்டுகின்றனர் தொண்டர்கள்.)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT