Published : 23 Apr 2014 09:25 AM
Last Updated : 23 Apr 2014 09:25 AM
நாட்டை சின்னாபின்னமாக்கிய காங்கிரஸ் கட்சியை என்கவுன்ட்டர் செய்யத்தான் மோடி களத்தில் நிற்கிறார் என்று பாஜக மூத்த தலைவர் வெங்கய்யா நாயுடு பேசினார்.
தென்சென்னை பாஜக வேட்பா ளர் இல.கணேசனை ஆதரித்து விருகம்பாக்கத்தில் செவ்வாய்க் கிழமை நடந்த பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் வெங்கய்யா பேசிய தாவது: இந்தியாவில் நான்கு திசைகளிலும் மோடி அலைதான் வீசுகிறது. நரேந்திரமோடி பிரதமரா வதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. மோடியை என்கவுன்ட்டர் சி.எம். என்று ப.சிதம்பரம் குற்றம் சாட்டுகிறார். 10 ஆண்டுகாலம் ஆட்சி செய்த காங்கிரஸ், நாட்டை சின்னாபின்னமாக்கி விட்டது. அப்படிப்பட்ட காங்கிரஸ் கட்சியை என்கவுன்ட்டர் செய்வதற்காகத் தான் நரேந்திர மோடி தற்போது களத்தில் நிற்கிறார்.
குஜராத்தின் மோடியைவிட தமிழகத்தின் லேடிதான் சிறந்தவர் என்கிறார் ஜெயலலிதா. இந்த லேடி தமிழகத்துக்காக இருக்கட்டும். அந்த மோடி ஒட்டுமொத்த இந்தியா வுக்குமாக இருப்பார். ஜெய லலிதா, முதலில் தன்னை முதல் வராகத் தேர்ந்தெடுத்த தமிழக மக்களுக்கு நல்லதைச் செய்யட் டும். குஜராத்தில் 24 மணி நேரமும் மின்சார வசதி உள்ளது. ஆனால் தமிழகத்தில் 6 முதல் 9 மணி நேரம் வரை மின்வெட்டு உள்ளது. இது தான் வளர்ச்சியடைந்த மாநிலமா?
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நீர், நிலம், ஆகாயம் என்று எந்தத் துறையையும் விட்டு வைக்கவில்லை. காங்கிரஸ் கட்சியின் அத்தனை ஊழல்களிலும் திமுகவுக்கும் பங்குண்டு.
தமிழக மீனவர்கள், இலங்கைத் தமிழர் பிரச்சினை உள்ளிட்டவற் றுக்கு நரேந்திர மோடியின் அரசு நிரந்தரத் தீர்வு காணும். தமிழகத்தின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க, சென்னையின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண இல.கணேசனுக்கு வாக்களியுங்கள்.
இவ்வாறு வெங்கய்யா நாயுடு பேசினார்.
பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த வெங்கய்யா நாயுடு, ‘‘தமிழ கத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பலமான கூட்டணியாக உள்ளது. எங்கள் கூட்டணி 310 இடங்களைப் பிடித்து ஆட்சியை அமைப்பது உறுதி. தென்னிந்தியாவில் 130 இடங்களில் வெற்றிபெறுவோம். மோடி பிரதமரானால் இடஒதுக்கீட் டுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. அவரே பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த வர்தான். எனவே இடஒதுக்கீட்டுக்கு எந்தப் பிரச்சினையும் வராது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT