Published : 25 Apr 2014 08:49 AM
Last Updated : 25 Apr 2014 08:49 AM

தேர்தல் முடிவுக்குப் பின் கூட்டணி குறித்து முடிவு: மார்க்சிஸ்ட் அறிவிப்பு

தேர்தல் முடிவு வெளியான பின்பு எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொலிட் பீரோ உறுப் பினர் பிமன் போஸ் கூறியுள்ளார்.

கொல்கத்தாவில் நேற்று பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அவர் பேட்டி யளித்தார். அப்போது பாஜகவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து விலக்கி வைப்பதற்காக காங்கிரஸ் அல்லது பிற கட்சிகளுடன் கூட்டணி அமைப்பீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு தேர்தல் முடிவுகளுக்குப் பின் ஏற் படும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டுதான் எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்று முடிவு செய்ய முடியும். இப்போதைய சூழ்நிலையில் உத்தேசமாக கூட்டணி குறித்து எதையும் கூற முடியாது என்று பதிலளித்தார்.

மதச்சார்பின்மையில் நம்பிக்கை இருந்தால் கம்யூனிஸ்ட் கட்சிகள் காங்கிரஸை ஆதரிக்க வேண்டு மென்று காங்கிரஸ் தலைவரும், மத்திய பாதுகாப்பு அமைச்சருமான ஏ.கே.அந்தோனி சமீபத்தில் கூறி யிருப்பது குறித்து பிமன் போஸிடம் கேட்டபோது, அவர் கூறியதில் எனக்கு உடன்பாடு இல்லை. அது குறித்து கருத்துத் தெரிவிக்கவும் விரும்பவில்லை.

நரேந்திர மோடி போன்ற ஒருவர் பிரதமராகும் சூழ்நிலை ஏற்பட்டால் அது நாட்டுக்கு பேரழிவாகவே அமையும். பாஜக நாட்டுக்கே அச் சுறுத்தலாக விளங்குகிறது. அதே நேரத்தில் காங்கிரஸும் அறிவிக்கப் படாத மதவாதக் கட்சிதான். அவர் கள் மதவாதத்துடன் பலமுறை சம ரசம் செய்து கொண்டுள்ளனர். நாட் டில் மதக் கலவரம் ஏற்பட்டபோது அதனை காங்கிரஸ் தடுக்கவில்லை.

நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகளைக் கையாளுவதில் காங்கிரஸ், பாஜக இரண்டுமே ஒன்றுதான். இதிலும் பாஜக மிகவும் மோசமாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாகவே செயல்படுகிறது என்றார் பிமன் போஸ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x