Published : 16 May 2014 08:09 AM
Last Updated : 16 May 2014 08:09 AM

புதிய எம்.பி.க்களுக்கான ஏற்பாடுகள் தயார்: மக்களவைச் செயலாளர் பி.ஸ்ரீதரன் பேட்டி

புதிதாக தேர்ந்தெடுக்கப்படவுள்ள எம்.பி.க்களுக்கு தேவையான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப் பட்டுள்ளதாக மக்களவைச் செய லாளர் பி.தரன் கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது: “புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் எம்.பி.க்கள், டெல்லிக்கு வரும்போது சிரமப்படாத வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளோம். டெல்லி விமான நிலையம், ரயில் நிலையங்களில் வந்திறங்கும் எம்.பி.க்களுக்கு தேவையான உதவிகளைச் செய்ய 6 வழிகாட்டு மையங்களை அமைத்துள்ளோம். மே 16-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை இந்த மையங்கள் செயல்படும். அதோடு, 16-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடரின்போதும் (முதல் 3 நாள்களுக்கு) இந்த மையங்கள் செயல்படும்.

டெல்லி வரும் புதிய எம்.பி.க்கள் விருந்தினர் மாளிகைகளிலும், அந்தந்த மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்குச் சொந்தமான மாளிகையிலும், ஓட்டல் அசோகாவிலும் தங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எம்.பி.க்கள் தங்கள் பதவிக் காலம் முழுவதும் நிரந்தரமாக தங்குவதற்கான ஏற்பாடுகளை வீட்டு வசதி இயக்குநரகம் அடுத்த சில மாதங்களில் செய்து தரும்.

பதவிக்காலம் முடிவடைந்த எம்.பி.க்கள், மீண்டும் தேர்ந்தெடுக் கப்படாதபட்சத்தில் ஒரு மாத காலத்திற்குள் வீட்டை காலி செய்யுமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.

புதிதாக பதவியேற்கவுள்ள எம்.பி.க்களுக்கு நாடாளுமன்ற நடைமுறைகள் குறித்து 5 நாள் கள் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய் துள்ளோம்.

அவர்களுக்கான போக்குவரத்து வசதி, தற்காலிக அடையாள அட்டை வழங்கும் பணி உள்ளிட்டவற்றையும் உடனுக் குடன் செய்து தர தயாராக உள்ளோம்” என்றார் பி.தரன்.

16-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடரை எப்போது தொடங் குவது என்பதை புதிய அரசு தான் முடிவு செய்யும். 15-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் 2009-ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதி தொடங்கியது. எனவே, இந்த மாதம் 31-ம் தேதிக்குள் மக்களவைக் கூட்டத்தை நடத்த வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x