Published : 16 May 2014 11:50 AM
Last Updated : 16 May 2014 11:50 AM

தனிப் பெரும்பான்மையை நெருங்குகிறது பாஜக: பிரதமராகிறார் மோடி

மத்தியில் பாஜக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றக் கூடிய சூழல் நிலவுகிறது. இதனால், கூட்டணி கட்சிகளின் உறுதுணையின்றியே மோடி பிரதமர் ஆவார்.

நரேந்திர மோடி வாரணாசி மற்றும் வதோதரா ஆகிய இரண்டு தொகுதிகளிலும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

நாடு முழுவதும் பாஜகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், காங்கிரஸ் இந்தத் தேர்தல் படுதோல்வியைச் சந்திக்கிறது.

மூன்றாவது அணியும் காங்கிரஸும் இணைந்தால்கூட எட்ட முடியாத அளவில் பாஜக கூட்டணி முன்னிலையில் உள்ளது.

பிற்பகல் 2.30 மணி நிலவரப்படி, பாஜக கூட்டணி 340 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பாஜக மட்டும் தனித்து 280 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. இதனால், தனிப் பெரும்பான்மைக்குத் தேவையான 272 இடங்களை நிச்சயம் வென்றுவிடும் சூழல் நிலவுகிறது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 54 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி தனித்து 43 இடங்களை மட்டும் கைப்பற்றும் நிலையில் உள்ளது. இதர கட்சிகள் 149 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

தேர்தலுக்குப் பிந்தையக் கருத்துக் கணிப்புகள் பாஜக கூட்டணியே பெரும்பான்மை பெறும் என்று கூறின. ஆனால், பாஜகவுக்கு தனிப் பெரும்பான்மைப் பெறும் நிலையில் உள்ளது.

பத்து ஆண்டு கால காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், ஊழல் உள்ளிட்ட விவகாரங்களில் மக்கள் கொண்டுள்ள அதிருப்தியும், மோடி அலையுமே இந்த மாற்றத்துக் காரணம் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

தமிழகத்தைப் பொறுத்தவரை, அதிமுக 37 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பாஜக கூட்டணி 2 இடங்களில் முன்னிலையில் உள்ளது. புதுச்சேரி தொகுதியில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x