Published : 09 May 2014 10:35 AM
Last Updated : 09 May 2014 10:35 AM
பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பொய் தகவல் களைக் கூறி பிரச்சாரம் செய்து வருவதாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
பிஹார் மாநிலம், கோபால்கஞ்ச் சில் நடைபெற்ற தேர்தல் பிரச்சா ரக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது: தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிதான் சிறப்பாக செயல்பட்டதாக மோடி பேசுகிறார்.
அதோடு, நாங்கள் தீவிரவா தத்தை எதிர்ப்பதில் தோல்வி கண்டுவிட்டோம் என்றும், ராணுவ வீரர்களின் கவுரவத்தைக் காப்பதற்கு தவறிவிட்டோம் என்றும் அவர் பிரச்சாரம் செய்து வருகிறார். இவை தவறான தகவல்கள்.
பாஜக கூட்டணி ஆட்சியில் இருந்த 5 ஆண்டுகளில் தீவிரவாதத் தாக்குதலால் மொத்தம் 22 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். ஆனால், காங்கிரஸ் கூட்டணியின் முதல் 5 ஆண்டுகள் ஆட்சியில் 800 பேர் மட்டுமே உயிரிழந்தனர். பொய்யான தகவல்களைக் கூறுவதன் மூலம் (காங்கிரஸுக்கு எதிராக) மக்களிடையே கோபத்தை ஏற்படுத்த மோடி முயற்சிக்கிறார்.
‘குஜராத் மாதிரி’யை முன் வைத்து பிரச்சாரம் செய்து வந்த மோடி, அதில் உள்ள மாயையை நான் வெளிப்படுத்தியதும் இப்போது அது தொடர்பாக பேசுவ தில்லை.
இந்த தேசம் அனைத்து பிரிவு மக்களுக்கும் சொந்தமானது என்பதே காங்கிரஸின் கொள்கை. ஆனால் பாஜகவோ, இந்த தேசம் ஒரு மதம் அல்லது ஜாதியைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே சொந்தமானது என்றும், 2 அல்லது 3 தொழிலதிபர்களுக்கு மட்டுமே உரியது என்றும் கருதுகிறது.
கிராமப் பகுதிகளில் மின் வசதியை ஏற்படுத்தும் நடவடிக்கை, பாஜக கூட்டணி அரசு காலத்தில் மேற்கொள்ளப்பட்டதைவிட காங்கிரஸ் கூட்டணி அரசில் இரு மடங்கு அதிகமாக மேற்கொள்ளப் பட்டுள்ளது. அதே போன்று சாலை வசதிகள் மூன்று மடங்கு அதிகமாக ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது.
விவசாயிகளிடமிருந்து 4,500 ஏக்கர் நிலத்தைப் பெற்ற மோடி தலைமையிலான குஜராத் மாநில அரசு, அதை சதுர மீட்டர் ரூ.1 என்ற விலையில் தொழிலதிபர் அதானிக்கு வழங்கியுள்ளது. இதன் காரணமாக ரூ. 3 ஆயிரம் கோடியாக இருந்த அதானியின் வருமானம் ரூ. 40 ஆயிரம் கோடியாக உயர்ந் துள்ளது. இது மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத் துக்கு ஒதுக்கப்படும் நிதியைவிட அதிகமாகும்.
ஆட்சிக்கு வந்தால் பெண்க ளுக்கு அதிகாரம் அளிக்கப் போவதாக மோடி கூறி வருகிறார். ஆனால், இவர் ஆட்சியில் இருக்கும் குஜராத்தில், தனது சக்தி முழுவதையும் பயன்படுத்தி இளம்பெண் ஒருவரை வேவுபார்ப்பதில் செலவிட்டுள்ளார்.
சுதந்திரம் பெற்றது முதல் இந்தியாவில் வளர்ச்சிப் பணிகளே நடைபெறவில்லை என்று மோடி கூறுகிறார். இந்தியா மற்றும் சீனாவின் வளர்ச்சியைப் பார்த்து அச்சப்படுவதாக அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளதை நினைவு படுத்த விரும்புகிறேன்.
மக்களுக்கு இலவச மருத்துவ வசதி, ஏழைகளுக்கு கான்கிரீட் வீடு, முதியோருக்கு ஓய்வூதியம் ஆகிய திட்டங்களை செயல்படுத் துவதற்காக மீண்டும் ஆட்சியில் அமர காங்கிரஸ் விரும்புகிறது.
கரும்பு உற்பத்தியை ஊக்கு விக்க மத்திய அரசு வழங்கிய ரூ. 6 ஆயிரம் கோடி உள்பட பல்வேறு திட்டங்களுக்கான நிதியை பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் செலவு செய்யாமல் வைத்துள்ளார். அவர் வேலைவாய்ப்பு ஏற்படுத் தித் தருவதாக அளித்த வாக்குறுதி யையும் நிறைவேற்ற வில்லை. இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT