Published : 09 May 2014 10:38 AM
Last Updated : 09 May 2014 10:38 AM

தேர்தல் ஆணையத்தை எதிர்த்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம்: மோடி கூட்டத்துக்கு அனுமதி மறுத்ததால் வாரணாசி, டெல்லியில் திரண்டனர்

நரேந்திர மோடி பொதுக்கூட்டத் துக்கு அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து வாரணாசி மற்றும் டெல்லியில் பாஜகவினர் வியாழக் கிழமை பெருந்திரளாகக் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வாரணாசியில் கங்கை நதிக்கரையில் ஆரத்தி வழிபாடு நடத்திவிட்டு பினியபாக் பொதுக் கூட்டத்தில் மோடி பங்கேற்பதாக இருந்தது. ஆனால் ஆரத்தி வழிபாடு மற்றும் பொதுக்கூட்டத்துக்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்க மறுத்துவிட்டது.

பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நிகழ்ச்சிகளுக்குத் தடை விதிக்கப்பட்டதாக ஆணையத்தின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதைக் கண்டித்து வாரணாசி யில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் முன்பு பாஜக வினர் வியாழக்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர். இதில் பாஜக மூத்த தலைவர்கள் அருண் ஜேட்லி, அமித் ஷா, அனந்த குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாவட்ட தேர்தல் அதிகாரி பிரன்ஜால் யாதவை மாற்ற வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

போராட்டத்தின்போது அருண் ஜேட்லி நிருபர்களிடம் கூறியதா வது: ேதர்தல் என்றால் அனைத்துக் கட்சியினருக்கும் சமவாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி வாரணாசியில் சாலையோர பிரச் சாரம் மேற்கொள்கிறார். ஆனால் நரேந்திர மோடிக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இது நியாயமா என்று அவர் கேள்வி எழுப்பினர்.

அமித் ஷா ஆவேசம்

அமித் ஷா நிருபர்களிடம் கூறிய தாவது:. மாநிலத்தில் ஆளும் சமாஜ்வாதி அரசின் உத்தரவின் படியே அதிகாரிகள் செயல்படுகி றார்கள். தீவிரவாதிகள் அச்சுறுத் தல் நிறைந்த காஷ்மீரில் பிரச்சா ரத்துக்கு அனுமதி அளிக்கப் படுகிறது. ஆனால் வாரணாசி யில் நரேந்திர மோடி பொதுக்கூட் டத்துக்கு மட்டும் அனுமதி மறுக்கப் படுகிறது என்று தெரிவித்தார்.

டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையம் முன்பாக பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்த சென்றனர். கட்சியின் டெல்லி மாநிலத் தலைவர் ஹர்சவர்தன் தலைமையில் சென்ற அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். அந்த இடத்திலேயே பாஜக தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக பாஜக மூத்த தலைவர்கள் வெங்கய்ய நாயுடு, ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்டோர் தேர்தல் ஆணைய அதிகாரிகளைச் சந்தித்து மனு அளித்தனர்.

முன்னதாக வெங்கய்ய நாயுடு நிருபர்களிடம் கூறியதாவது:

தலைமைத் தேர்தல் ஆணை யத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்த நாங்கள் இங்கு வரவில்லை. வாரணாசி மாவட்ட தேர்தல் அதிகாரியை மாற்ற வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x