Published : 05 May 2014 11:03 AM
Last Updated : 05 May 2014 11:03 AM
மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் அருண் ஜேட்லி, பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். தேர்தல் ஆணையத்திடம் ஜேட்லி தாக்கல் செய்துள்ள தேர்தல் செலவு கணக்கில் ரூ. 23.21 லட்சம் செலவாகி உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல் பார்வையாளர் கணக்கீட்டின்படி, அருண் ஜேட்லி ரூ. 44.84 லட்சம் செலவிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வேறுபாடு குறித்து விளக்கம் அளிக்கும்படி, தேர்தல் ஆணையம் சார்பில் அருண் ஜேட்லிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT