Published : 08 May 2014 10:34 AM
Last Updated : 08 May 2014 10:34 AM

மோடி கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு: தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந் திர மோடி போட்டியிடும் வாரணாசி யில் அவரது கூட்டத்துக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத் தது தொடர்பாக அக்கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பாஜக மாநிலங்களவை தலை வர் அருண்ஜேட்லி தேர்தல் ஆணையத்திடம் புதன்கிழமை புகார் அளித்தார். அதில் “வேட் பாளர்களின் தார்மீக உரிமையான தேர்தல் பிரச்சாரத்துக்கு வாரணாசி நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது. இதற்கு நம்ப முடியாத காரணங் களை கூறியுள்ளது” என்று கூறப் பட்டுள்ளது.

இதற்காக வாரணாசியின் தேர்தல் அதிகாரியை மாற்றும்படி யும் ஜேட்லி தனது புகாரில் வலி யுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் நிர்மலா சீத்தாராமன் ‘தி இந்து’ விடம் கூறுகையில், “வாரணாசி யில் மாவட்ட தேர்தல் அதிகாரி யாக இருப்பவர், ஆளும் சமாஜ்வாதி கட்சித் தலைவருக்கு மிகவும் வேண்டியவர் என்று கூறப்படுகிறது. வேட்பாளர் ஒருவ ருக்கு தாம் போட்டியிடும் தொகுதி யில் பொதுகூட்டம் நடத்த அனு மதி மறுக்கப்படுவது இதுவே முதல்முறை” என்றார்.

வாரணாசியின் கங்கை கரையில் நாள்தோறும் நடை பெறும் கங்கை ஆர்த்தியில் கலந்துகொண்ட பின், அந்நகரில் வசிக்கும் பிரபலங்களை சந்தித்து விட்டு மாலை பினிய பாக் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள மோடி திட்டமிட்டிருந்தார். ஆனால் ஒருநாள் முன்னதாக இதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துவிட்டது.

இதுகுறித்து வாரணாசி காவல் துறை அதிகாரிகள் ‘தி இந்து’விடம் கூறுகையில், “கங்கை யின் ஒருகரையில் இருந்து மறு கரைக்கு படகுகளில் செல்ல அனுமதி கேட்டிருந்தனர். கங்கையில் மோடிக்கு போலீஸ் பாதுகாப்பு தருவது மிகவும் சிரமம். மேலும் நகரின் சிறிய சந்துகளிலும் வாழும் பிரபலங்கள் வீடுகளுக்கு மோடி சென்றால், போக்குவரத்து பாதிப்பு ஏற்படும். பினியாபாக் பகுதியின் சிறிய மைதானத்தை சுற்றிலும் முஸ் லிம்கள் வசிக்கிறார்கள். இவர்களிடையே தீவிரவாதிகள் நுழைந்து கூட்டத்தில் தாக்குவது எளிது என்பதாலும் மறுப்பு தெரிவிக்கப்பட்டது” என்றனர்.

இந்தத் தடை தொடர்பாக காலையில் கிளம்பிய சர்ச்சைக்கு பின், பினியாபாக் அருகிலுள்ள ரொஹன்யா மற்றும் ராணுவக் குடியிருப்பு பகுதியின் ஒரு கிறிஸ்தவ பள்ளியில் கூட்டம் நடத்த மோடிக்கு அனுமதி தரப்பட்டுள்ளது.

இதை ஏற்க மறுத்த பாஜக போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x