Published : 26 Apr 2014 09:59 AM
Last Updated : 26 Apr 2014 09:59 AM

என்னைத் தடுக்க முயற்சிக்கிறது காங்கிரஸ்: பதான்கோட் பொதுக் கூட்டத்தில் நரேந்திர மோடி குற்றச்சாட்டு

“தன்னார்வத் தொண்டு நிறுவனங்களோடு இணைந்து நான் ஆட்சிக்கு வருவதைத் தடுக்க காங்கிரஸ் முயற்சி செய்து வருகிறது” என்று நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

பஞ்சாப் மாநிலம், குருதாஸ்பூர் தொகுதி வேட்பாளரும் நடிகருமான வினோத் கன்னாவை ஆதரித்து பாஜக பிரதமர் வேட்பாளர் மோடி வெள்ளிக்கிழமை பிரச்சாரம் செய்தார். பதான்கோட்டில் நடை பெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:

போர்களில் உயிரிழந்த வீரர் களின் எண்ணிக்கையைவிட வறுமையால் உயிரிழந்த விவசாயி களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. நமது விவசாயிகளை அரசாங்கமே கொலை செய்து வருகிறது. மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் நிலை மாறும்.

நாட்டின் உணவுத் தேவையில் பெரும் பகுதியை பஞ்சாப் விவசாயிகள் பூர்த்தி செய்து வருகின்றனர். மத்தியில் பாஜக ஆட்சி அமைத்தால் உணவு தானியங்களுக்கான ஆதார விலை அதிகரிக்கப்படும். பஞ்சாபில் மிகப்பெரிய நீர்ப்பாசன திட்டம் நிறைவேற்றப்படும்.

தாய்-மகன் ஆட்சி

மத்தியில் இப்போது தாய், மகன் கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. அந்தக் கூட்டணி நாட்டை சீர்குலைத்துவிட்டது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு நாட்டை குறித்து அக்கறையே இல்லை. தனது மகனை (ராகுல்) குறித்து மட்டுமே அவர் கவலைப்படுகிறார்.

இன்றைய நிலையில் மத்தியில் ஸ்திரமான அரசு அமைய வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். ஆட்சி பறிபோவது உறுதி என்பது காங்கிரஸ் தலைவர்களுக்கு தெள்ளத் தெளிவாகப் புரிந்து விட்டது. அவர்களின் பார்வை இப்போது என் பக்கமாகத் திரும்பி யுள்ளது.

தன்னார்வத் தொண்டு நிறு வனங்களோடு இணைந்து நான் ஆட்சிக்கு வருவதைத் தடுக்க வேண்டும் என்ற ஓர் அம்ச கொள் கையோடு காங்கிரஸ் தீவிரமாக களப்பணி ஆற்றி வருகிறது.

ஆனால் பாஜகவுக்கு ஆதர வாக இப்போது பெரும் புயல் உருவாகியிருக்கிறது. அதை யாராலும் தடுக்க முடியாது. மே 16-ம் தேதிக்குப் பிறகு எங்கிருப் போம் என்பது காங்கிரஸ் தலைவர் களுக்கு இப்போதே தெரிந்து விட்டது.

மக்களவைத் தேர்தலில் காங் கிரஸ் வெற்றி பெறும் தொகுதி களின் எண்ணிக்கை நிச்சயமாக இரட்டை இலக்கத்தைத் தாண் டாது. கறுப்புப் பணம் என்ற பெயரைச் சொன்னாலே காங்கிரஸ் தலைவர்களுக்கு நடுக்கம் வந்து விடுகிறது. காங்கிரஸை சேர்ந்த முன்னாள் முதல்வர் ஒருவர் (அம்ரீந்தர் சிங்) தனக்கு வெளிநாட்டு வங்கியில் கணக்கு இருப்பதை அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விரைவில் விளக்கமளிக்க வேண்டிய நிலை வரும்.

பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை

இந்தியாவை போரில் தோற்கடிக்க முடியாதவர்கள், தீவிரவாதிகளின் துப்பாக்கி குண்டு களால் இந்தியாவை அழிக்க முடியாதவர்கள் இப்போது ஒரு புதிய வழியைக் கையாண்டு வருகிறார்கள்.

பஞ்சாப் மாநிலத்துக்குள் அண்டை நாட்டில் (பாகிஸ்தான்) இருந்து போதைப்பொருள் கடத்தப் பட்டு வருகிறது. அவர்கள் நமது நாட்டின் இளைஞர்களை அழிக்க திட்டமிட்டு வருகிறார்கள். பாஜக ஆட்சிக்கு வந்தால் எல்லையில் பாதுகாப்பு நவீனப்படுத்தப்படும். அதன்மூலம் போதை கடத்தலுக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக் கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x