Published : 26 Apr 2014 03:30 PM
Last Updated : 26 Apr 2014 03:30 PM

மக்கள் நாடகத்தையும் எதார்த்தத்தையும் வேறுப்படுத்தி பார்க்க வேண்டும்: பிரியங்கா பேச்சு

ராகுல் காந்திக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுப்பட்டிருக்கும் பிரியங்கா, ‘மக்கள் நாடகத்தையும் எதார்த்தத்தையும் வேறுப்படுத்தி பார்க்க வேண்டும்’ என்று பேசினார்.

அமேதி தொகுதியில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை ஆதரித்து, பிரியங்கா தனது இரண்டாம் கட்ட பிரசாரத்தை இன்று துவக்கி உள்ளார். அப்போது அவர் பேசுகையில்," அமேதி தொகுதி மக்கள் வெளியாட்களுக்கு வாய்ப்புகளை வழங்க கூடாது. வாக்களார்களான நீங்கள் உங்களுக்கான நபரை தான் தேர்வு செய்ய வேண்டும். இங்கு வரும் அரசியல்வாதிகள், அமேதி தொகுதியில், ‘மின்சாரம் இல்லை’, 'வளர்ச்சி இல்லை’ என்று கூறுகின்றனர். நான் சந்தி சவுக்(டெல்லியின் மக்களவை தொகுதி) ஸ்மிரிதி இராணியிடம் கேட்க விரும்புவது, அவர் கடந்த தேர்தலுக்கு பின் அந்த தொகுதிப் பக்கம் சென்றாரா? என்று தான்.

திரைத்துறையிலிருந்து அந்த தொகுதிக்கு 2004-ம் ஆண்டு தேர்தலின் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் இந்த தேர்தலில் ராகுலுக்கு எதிராக அமேதி தொகுதியில் களம் இறங்குகிறார். ஆனால் அவர் மக்களுக்கு தொடர்பு இல்லாதவர். அமேதி மக்கள் நாடகத்திற்கு யதார்த்தத்திற்கும் உள்ள வேறுபாட்டை உணர வேண்டும். ராகுல் இந்த மக்களுக்காக பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளார். அவர் இந்த தொகுதிக்காக செய்திருக்கும் வேலைகளை பட்டியலிடக் கூட முடியாது. ரேபரேலியை காட்டிலும் இங்கு பலதரப்பில் வளர்ச்சிகள் ஏற்பட்டுள்ளது. இவை அனைத்தையும் கூற நான் தனிப் பட்டியலை தயாரிக்க வேண்டும்.

இந்த தொகுதியில் வெண்மை புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்பது ராகுலின் ஆசை. இங்கு பால் பொருட்கள் வெளி ஊர்களிலிருந்து தான் கொண்டுவரப்படுகிறது. ராகுல், எனது தந்தை ராஜீவ் காந்தியை போல தொலைநோக்குப் பார்வை கொண்டவர்.

அன்று ராஜீவ், கம்ப்யூட்டர், தொழில்நுட்பம் பற்றி பேசிய போது, அவரை விமர்சித்தவர்கள் தான் இப்போது ராகுல் மாற்றங்கள் குறித்து பேசுகையின் அரை எதிர்க்கின்றனர்” என்று பிரியங்கா பேசினார்.

அமேதி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ராகுல் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் ஸ்மிரிதி இராணியும், ஆம் ஆத்மி சார்பில் குமார் விஸ்வாசும் களம் இறங்குகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x