Published : 01 May 2014 08:54 AM
Last Updated : 01 May 2014 08:54 AM

பாபா ராம்தேவ் பிரச்சினையில் நரேந்திர மோடியின் நிலை என்ன?: விளக்கம் அளிக்க காங்கிரஸ் கோரிக்கை

ராகுல் காந்தியுடன் தலித் சமூகத் தினரை இணைத்து, அவமதிக்கும் வகையில் பேசிய பாபா ராம்தேவ் விஷயத்தில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தனது நிலையை தெரிவிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் ஷக்கீல் அகமது புதன்கிழமை செய்தியாளர் களிடம் கூறியதாவது:

தலித் சமூகத்தினரை தரக்குறை வாகப் பேசியமைக்காக ராம்தேவ் மீது தேர்தல் ஆணையம், தேசிய எஸ்.சி. மற்றும் எஸ்.டி. ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆனால், இதைப் பொருட்படுத்தாமல் பாஜக, ராம்தேவிற்கு ஆதரவு தந்து கொண்டிருக்கிறது. ‘ராஷ் டிரிய ஜனதா தளத்துடனான காங்கிரஸ் கட்சியின் தேனிலவு முடிந்தது’ என்ற தலைப்புகளில் வெளியான பழைய செய்திகளை உதாரணம் கூறி நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறது. ராம் தேவுடன் சேர்த்து அவருக்கு ஆதரவளிப்பவர்கள் (பாஜக) மீதும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களின் பிரதமர் வேட்பாளர் மோடி, இந்த விஷயத்தில் இதுவரை கருத்து கூறாமல் இருக்கிறார். அவரும் ராம் தேவிற்கு ஆதரவளிக்கிறாரா என அவரது நிலையை தெளிவாக விளக்க வேண்டும்.

கடந்த செவ்வாய்கிழமை உலக வங்கி வெளியிட்ட புள்ளிவிவரத்தில் இந்தியாவிற்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது. இது கடந்த பத்து வருடங்களில் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி செய்த சாதனையாகும்.

இதன் முழுப்பலனும் பிரதமர் மன்மோகன்சிங்கையே சாரும். இதற்காக, காங்கிரஸைப் பாராட்ட பாஜகவுக்கு மனமில்லை என்றாலும் இந்திய நாட்டின் பொதுமக்களுக்காவது பாராட்டு தெரிவிக்கலாம் அல்லவா?

மோடி தொடர் குற்றவாளி

தேர்தல் விதிமுறைகளை மீறுவது மோடிக்கு புதிய விஷயமல்ல. இதைச் செய்வதில் அவர் ஒரு தொடர் குற்றவாளி. அவரது கட்சியின் தேர்தல் அறிக்கை, தேர்தல் நாளன்று வெளியானது. அதேபோன்ற ஒரு தேர்தல் நாளன்று மோடி வேட்புமனு தாக்கல் செய்தார். தேர்தல் பிரச்சாரம் முடிந்து வாக்களிப்பு நாளில் வாக்களித்த பின்பு பிரச்சாரம் செய்கிறார். இதற்காக அவர் மீது தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x