Published : 01 May 2014 10:52 AM
Last Updated : 01 May 2014 10:52 AM

விறுவிறுப்பான 7-ம் கட்ட தேர்தல்: தாத்ரா நாகர் ஹவேலியில் 85% வாக்குப் பதிவு

மக்களவைக்கு 7-வது கட்டமாக 7 மாநிலங்கள், 2 மத்திய ஆட்சிப் பிரதேசங்களில் உள்ள 89 தொகுதி களில் நேற்று விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது.

பஞ்சாபில் ஏற்பட்ட வன்முறை யில் 10 பேர் காயமடைந்தனர். மற்றபடி வாக்குப்பதிவு பெரும் பாலும் அமைதியாக நடைபெற்றது.

குஜராத் (26 தொகுதிகள்) 62%, பஞ்சாப் (13) 73%, தெலங்கானா (17) 72%, உத்தரப்பிரதேசம் (14) 57%, பிஹார் (7) 58%, மேற்கு வங்கம் (9) 82%, ஜம்மு காஷ்மீர் (நகர்) 25.62%, தாத்ரா நாகர் ஹவேலி (1) 85%, டாமன் டையூ (1) 76% வாக்குகள் பதிவாகின.

இதில் தெலங்கானாவில் மக்களவை தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் (119 தொகுதிகள்) நடைபெற்றது.

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாஜக தலைவர் கள் எல்.கே.அத்வானி, ராஜ்நாத் சிங், முரளி மனோகர் ஜோஷி, அருண் ஜேட்லி உள்ளிட்டோர் நேற்றைய தேர்தலில் களத்தில் இருந்த முக்கிய வேட்பாளர்கள்.

இதில் நரேந்திர மோடி, எல்.கே.அத்வானி ஆகியோர் குஜராத் மாநிலம், காந்தி நகரில் வாக்களித்தனர். உ.பி. ஆளுநர் பி.எல்.ஜோஷி, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, பாஜக தேசிய தலைவர் ராஜ்நாத் சிங், லக்னோ தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரீட்டா பகுகுணா ஜோஷி ஆகியோரும் வாக்களித்தனர்.

பஞ்சாபில் மோகா, காடூர் சாஹிப், அமிர்தசரஸ் ஆகிய இடங்களில் அகாலி தளம் காங்கிரஸ் தொண்டர்களிடையே சிறுசிறு மோதல்கள் ஏற்பட்டன. இதில் மோகா அருகே சங்கபுத்ரா கிராமத்தில் ஏற்பட்ட மோதலில் 10 பேர் காயமடைந்தனர். பின்னர் போலீஸார் தலையிட்டு இங்கு அமைதியை ஏற்படுத்தினர்.

உ.பி.யின் சீதாபூர் தொகுதியில், வாக்குச் சாவடியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை காவலருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏ ராம்பால் யாதவ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

மேற்கு வங்கத்தில் சில இடங் களில் வாக்குப் பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து பின்னர் அவை மாற்றப்பட்டன.

மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளில் இதுவரை 7 கட்டங்க ளாக 438 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்றுள்ளது. எஞ்சிய 105 தொகுதிகளுக்கு வரும் மே 7 (64 தொகுதிகள்), மே 12 (41 தொகுதி கள்) ஆகிய தேதிகளில் வாக்குப் பதிவு நடைபெறும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x