Published : 30 Apr 2014 08:54 AM
Last Updated : 30 Apr 2014 08:54 AM
மூன்றாவது அணி ஆட்சி அமைத் தால் அதற்கு வெளியிலிருந்து ஆதரவு அளிப்பது என்பது நடை முறை சாத்தியமற்றது என்று கருத்து தெரிவித்துள்ளார் காங்கிரஸ் பொதுச்செயலர் திக் விஜய் சிங்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி: மூன்றாவது அணி அரசு அமைத்தால் அதற்கு வெளியிலிருந்து ஆதரவு தருவது வெற்றிகரமாக இருக்காது என்பதுதான் எனது தனிப்பட்ட கருத்து. வெளியிலிருந்து ஆதரவு என்பது நடைமுறைக்கு ஒத்து வராது. நிறைவேற்ற முடியாத லட்சியமாகவே அது இருக்கும்.
அமைச்சரவையில் இடம் பெறும் ஒவ்வொருவரும் பொறுப்பு ஏற்கக் கூடியவர்களாக இருக்கும் வகையில் கூட்டணி இருக்க வேண்டும். இதுதான் நடைமுறை சாத்தியமிக்க கொள்கையாகும்.
1996ல் ஆட்சியில் இருந்த ஐக்கிய முன்னணி அரசுக்கு வெளி யிலிருந்து ஆதரவு கொடுத்தது வெற்றிகரமாக நீடிக்கவில்லை. அப்போது காங்கிரஸ் அந்த முடிவு எடுத்தது தவறு என்று கூற முடியாது. அப்போது அது சரியான முடிவாக இருந்திருக்கலாம். ஆனால் வெற்றி கரமாக அமைய வில்லை என்பதுதான் உண்மை.
கருத்துக் கணிப்புகள்
காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 100 மக்களவைத் தொகுதிகளே கிடைக் கும் என கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. இந்த கணிப்புகளை தேர்தல் முடிவுகள் பொய்ப்பிக்கும். காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கருத்துக் கணிப்புகள் வெளியாவது இது முதல் தடவை அல்ல. 2004 தேர்தலிலும் பாஜக தலைமையி லான தேசிய ஜனநாயக கூட்ட ணிக்கு ஆதரவாகவே கருத்துக் கணிப்புகள் இருந்தன. 2009லும் இதே வகையில்தான் கருத்துக் கணிப்புகள் வெளிவந்தன.
நரேந்திர மோடி பெரும் செலவு செய்து தனது வெற்றிக்காக விளம்பரம், பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இவற்றையெல்லாம் மீறி கருத்துக் கணிப்புகள் சுத்தப் பொய் என்பதை நிரூபிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியானது அதிக இடங்களில் வெற்றிபெறும்.
இப்போது போல எப்போதுமே இந்த அளவுக்கு மிக அதிக அளவில் தேர்தல் பிரச்சாரத்துக்கு செலவு செய்ததை நான் பார்த்ததில்லை. தொழிலதிபர்கள் மோடிக்கு நேரடியாகவே பெரும் தொகையை வழங்குகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. முதலாளித்துவத்தின் அடையாளச் சின்னமாக திகழ்கிறார் நரேந்திர மோடி. குஜராத்தில் தொழிலாளர் கள், விவசாயிகளின் வயிற்றில் அடித்து முதலாளிகளுக்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளார் மோடி.
தொழிலாளர்கள் மத்தியில் அதிருப்தியும் மனக்குமுறலும் அதிகம் காணப்படுவது குஜராத் தில்தான். எங்களைப் பொருத்த மட்டில் பிரச்சினை மோடி என பார்க்கவில்லை. முதலாளிகளுக்கு ஆதரவு தரும் அவரது கொள்கை நல்லதா, வேண்டுமா என்பதுதான்.
2ஜி அலைக்கற்றை, நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு போன்ற பிரச் சினைகளில் பாஜக பரப்பும் பொய் பிரச்சாரங்களை முறியடிப்பதிலும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் சாதனைகளை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்துவதிலும் காங்கிரஸ் தவறிவிட்டது என்றார் திக்விஜய் சிங்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT