Published : 29 Apr 2014 09:11 AM
Last Updated : 29 Apr 2014 09:11 AM
அரசியல் தரத்தை தாழ்த்தும் வகையில் பிரியங்கா வதேரா பேசி வருகிறார் என்று பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அருண் ஜேட்லி திங்கள்கிழமை கூறியதாவது: பாஜக வினரை மிரண்டுபோன எலிகளுடன் ஒப்பிட்டு பிரியங்கா பேசியுள்ளார். தான் யாரை பார்த்தும் பயப்பட மாட்டேன் என்றும் அவர் பேசியுள் ளார்.
இதுபோன்ற பேச்சுகளால் அரசியல் தொடர்பான விவாதத் தின் தரத்தை பிரியங்கா தாழ்த்தி விட்டார். இதைப் போன்று எனது குடும்பத்தினர் பிற அரசியல் கட்சியி னரைப் பற்றி விமர்சனம் செய் திருந்தால், அது குறித்து நான் மிகவும் கவலைப்படுவேன்.
பிரியங்காவும் வதேராவும் யாருக்கும் பயப்பட வேண்டிய தில்லை. ஆனால், சட்டத்திற்கு அவர் பயப்பட்டுத்தான் ஆக வேண்டும்.
வேட்பாளர்கள் வெவ்வேறு பணி களில் ஈடுபட்டிருப்பதால், அவர் களுக்கு உதவ உறவினர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடலாம். அதே சமயம், அவர்கள் எதிர்க்கட்சியினர் குறித்து கண்ணியமற்ற வகையில் பேசக்கூடாது.
பரூக் அப்துல்லாவிற்கும் கண்டனம்
நரேந்திர மோடிக்கு வாக்களிப் பவர்கள் கடலில் மூழ்கிவிடுவார்கள் என்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா கூறி யுள்ளார். இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்றும், இங்கு மதவாத அரசியலுக்கு இடமில்லை என்றும் பரூக் கூறிய கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
இந்தியாவில் மதச்சார்பற்றத் தன்மை மிகப்பெரிய தோல்வியைத் தழுவியதே ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில்தான். அங்கு வசித்து வந்த காஷ்மீர் பண்டிட்டுகள் வெளி யேற்றப்பட்டனர். பரூக் அப்துல்லா சொல்வதுபோல் காஷ்மீர் மதவெறி அரசியலை ஏற்றுக்கொள்ளாது என்றால், பண்டிட்டுகளுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து அவர்களை வரவேற்பார்களா?
மோடி பிரதமரானால், யாரும் கடலில் குதிக்கவேண்டியதில்லை. காஷ்மீர் பண்டிட்டுகள் மீண்டும் தங்களின் இருப்பிடத்தக்கு திரும்ப முடியாத நிலைக்கு பரூக்கும் அவரது கட்சியும் மவுன சாட்சிகளாக இருந்தால், அது தொடர்பாக வருத்தப்படுவதன் அடையாளமாக அவர்தான் ‘தால்’ ஏரியில் ஒருமுறை தலை மூழ்கி எழவேண்டும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT