Published : 01 Apr 2014 06:28 PM
Last Updated : 01 Apr 2014 06:28 PM

இது எம் மேடை: நிறைவேறாத ரயில் திட்டங்கள்

ஏ.சி.ராஜன் - சமூக ஆர்வலர்:

மதுரையில் இருந்து சென்னை அல்லது வெளிமாநிலம் செல்லக் குறைந்தது 60 நாட்களுக்கு முன்பே திட்டமிட வேண்டும். இல்லையெனில், ரயிலில் டிக்கெட் கிடைக்காது. ரயில் பாதை மின் மயமாக்கப் பட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்றார்கள். பிறகு, இரட்டைப் பாதை வந்தால் கூடுதல் ரயில் வரும் என்றார்கள். இந்த இரு திட்டங்களுமே இன்னும் முடிந்தபாடில்லை. வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது என்பது மதுரைக்குச் சரியாகப் பொருந்தும்.

மதுரையிலிருந்து சென்னைக்கு சாதாரணப் பெட்டியில் செல்லும் பயணிகள் படும் பாடு மிக மோசம். குமரி, நெல்லை, தூத்துக்குடி, செங்கோட்டை போன்ற ஊர்களில் இருந்து சென்னை செல்லும் ரயில்கள் அனைத்தும் அந்தந்தப் பகுதிகளிலேயே நிரம்பிவிடுவதால், மதுரைக்கு வரும்போது உட்கார இடம் கிடைப்பதில்லை. மதுரை பயணிகளுக்கு என குறிப்பிட்ட சதவீதம் இருக்கைகள் ஒதுக்கப்பட வேண்டும் அல்லது மதுரைக்குக் கூடுதலாக தனிப் பெட்டிகள் இணைக்கப்பட வேண்டும்.

மதுரை - போடி, திண்டுக்கல் - பழனி - கோவை போன்ற ரயில் பாதைத் திட்டங்கள் இழுத்தடிக்கப்படுகின்றன. புனிதத் தலங்களாகிய வேளாங்கண்ணி, நாகூருக்கு மதுரையிலிருந்து நேரடியாக ஒரு ரயில்கூடக் கிடையாது. இந்த நிலையில், மதுரைக்கு மெட்ரோ ரயில், மோனோ ரயில் என்று மக்கள் காதுக்குள்தான் ரயில் விடுகிறார்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x