Published : 09 Mar 2014 05:48 PM
Last Updated : 09 Mar 2014 05:48 PM
க. நடராஜன் - ம.தி.மு.க. விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர்.
தென்ஆற்காடு மாவட்டம் பிரிக்கப்படாமல் இருந்தபோது, வருவாய்த் துறையினர் கல்வராயன் மலையில் நிலங்களை அளந்தபோது மலைவாழ் மக்களின் நிலத்தை ‘வனத் துறைக்குச் சொந்தமான நிலம்’ என்று தவறாக எழுதிவிட்டனர். அப்போதைய தென் ஆற்காடு ஆட்சியர் தேவேந்திரநாத் சாரங்கி உண்மை நிலையை மத்திய அரசுக்கு எழுதி அனுமதி கேட்டார். ஆனால், இதுவரை மத்திய அரசு நிலத்தை மலைவாழ் மக்களுக்குத் தரவில்லை. இதற்கு இதுவரை வந்த எம்.பி-க்களும் முயற்சி எடுக்கவில்லை.
ஆர். மனோகரன், மாவட்டத் தலைவர், இந்திய ஜனநாயகக் கட்சி.
வரலாற்றுச் சிறப்புமிக்க தியாக துருகம் மலையைத் தொல்லியல் துறையிடம் ஒப்படைத்துப் பராமரிக்க வேண்டும். முன்பெல்லாம் கோமுகி அணையை அக்டோபர் முதல் தேதியில் திறந்தால், பிப்ரவரி மாதம்வரை தண்ணீர் வரும். இப்போது அது குறைந்துவிட்டது. அணையில் 15 அடிக்கும் அதிகமாக வண்டல் படிந்துள்ளது. அதைத் தூர் வாரினால் இரண்டு போகம் விவசாயம் செய்யலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT