Last Updated : 01 Jun, 2023 04:26 PM

 

Published : 01 Jun 2023 04:26 PM
Last Updated : 01 Jun 2023 04:26 PM

புதுச்சேரியில் இளநிலை, முதுநிலை பயிலும் பார்வையற்ற மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி: ஆளுநர் ஒப்புதல்

புதுச்சேரி: இளநிலை மற்றும் முதுநிலை கல்வி பயிலும் பார்வையற்ற மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்குவதற்கான புதிய திட்டத்துக்கான அரசாணை வெளியிடும் கோப்புக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை ஒப்புதல் தந்துள்ளார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை அரசு அனுப்பிய முக்கிய கோப்புகளுக்கு இன்று ஒப்புதல் அளித்துள்ளார். அதன் விவரம்: "கடந்த பட்ஜெட்டில் அறிவித்தபடி, "இயந்திரமயமாக்கல் மூலம் கடல் மீன்பிடித் தொழிலை மேம்படுத்துதல் மற்றும் உயர்வேக டீசல் எண்ணெய் மீதான விற்பனை வரிச் செலவை ஈடுசெய்தல் மற்றும் சிறுதொழில் மீனவர்களுக்கு உதவி செய்தல் திட்டத்தின் கீழ் புதுச்சேரி மாநிலத்தில் பதிவு பெற்ற மரம் / இரும்பு / ஃபைபர் மீன்பிடி விசைப் படகுகளுக்கு பழுது நீக்கி பராமரிப்பு பணிகளுக்காக தற்போது வழங்கப்பட்டு வரும் நிதியுதவி ரூ.20,000-இல் இருந்து ரூ.30,000 ஆக உயர்த்தி வழங்கவும், கண்ணாடி நுண்ணிழை கட்டுவலை விசைப் படகுகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் நிதியுதவி ரூ.10,000-இல் இருந்து ரூ. 20,000 ஆக உயர்த்தி வழங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இளநிலை மற்றும் முதுநிலை கல்வி பயிலும் பார்வையற்ற மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக் கணினி வழங்குவதற்கான புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகள் வகுத்து அரசாணை வெளியிடுவதற்கான கோப்பிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

லேப்டாப் பற்றி அரசு வட்டாரங்களில் விசாரித்தபோது, "அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு இலவசமாக லேப்டாப் வழங்கப்படும் என்று கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் முதல்வர் ரங்கசாமி அறிவித்திருந்தார். தற்போது ஜெம் போர்டல் மூலம் லேப்டாப் வாங்க ஏல நடவடிக்கையை கல்வித்துறை துவங்கியுள்ளது. மொத்தம் 25,381 லேப் டாப் வாங்க அதற்கான நிறுவனங்களிடம் இருந்து போர்ட்டல் மூலம் ஏலப் பணிகளை துவங்கியுள்ளார்.

அத்துடன் முதல்முறையாக இளநிலை, முதுநிலையில் கல்வி பயிலும் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளை கணக்கிட்டு அவர்களுக்கும் தர புதிதாக திட்டமிடப்பட்டுள்ளது. ஆளுநர் ஒப்புதல் தந்துள்ளதால் அப்பணிகளையும் விரைவுப்படுத்த உள்ளோம்" என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x