Published : 24 May 2023 04:21 AM
Last Updated : 24 May 2023 04:21 AM

மதுரை | கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி மாணவர் சேர்க்கை: 4035 இடங்களுக்கு 8990 பேர் விண்ணப்பம்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் தாய் மெட்ரிக்குலேசன் பள்ளியில் இன்று இலவச கட்டாயக்கல்வி உரிமைச்சட்டப்படி மாணவர் சேர்க்கைக்கான தேர்வில் பங்கேற்ற பெற்றோர்கள்.

மதுரை: மதுரை மாவட்டத்திலுள்ள 393 பள்ளிகளில் இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டப்படி 4035 இடங்களுக்கு 8990 பேர் விண்ணப்பித்ததால் நேற்று (மே 23) குலுக்கல் முறையில் தேர்வு நடைபெற்றது.

இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட, நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவுநிலை எல்கேஜி வகுப்பில் குறைந்தபட்ச 25 சதவீத இட ஒதுக்கீட்டு சேர்க்கைக்கான குலுக்கல் நேற்று முதன்மை கல்வி அலுவலர் கா.கார்த்திகா ஆலோசனைப்படி நடைபெற்றது. தனியார் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலர் பா.கோகிலா தலைமையில் கல்வித்துறை ஆய்வு அலுவலர்கள் முன்னிலையில் குலுக்கல் நடைபெற்றது.

இதில், 9132 விண்ணப்பங்களில் தகுதியற்ற 142 விண்ணப்பங்கள் கழித்ததுபோக எஞ்சிய 8990 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. 399 தனியார் பள்ளிகளில் 4035 இடங்களுக்கு 8990 விண்ணப்பித்ததால் குலுக்கல் முறையில் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் கந்தசாமி, செந்தில்குமார் முருகன், மாவட்ட திட்ட அலுவலர் சரவணமுருகன், அலுவலக கண்காணிப்பாளர் அண்ணாமலை, உதவியாளர்கள் கனகலிங்கம், ராஜேஷ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்த்தி, மாவட்ட தகவல் அலுவலர் செந்தில்வேல்குமரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தனியார் பள்ளி மாவட்ட கல்வி அலுவலர் பா. கோகிலா பழங்காநத்தம் டிவிஎஸ் நர்சரி பள்ளியில் நடந்த குலுக்களில் கலந்து கொண்டார். மாவட்ட திட்ட அலுவலர் சரவணமுருகன் அலங்காநல்லூர் தாய் மெட்ரிக்குலேசன் பள்ளியில் கலந்து கொண்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x