Published : 16 May 2023 06:07 AM
Last Updated : 16 May 2023 06:07 AM
சென்னை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டு விடுதிகள் மற்றும் முதன்மை நிலை விளையாட்டு மையங்கள் சென்னை, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, விழுப்புரம், ஈரோடு, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் செயல்பட்டு வருகின்றன.
இந்த விளையாட்டு விடுதிகளில் 7, 8, 9, 11-ம் வகுப்புக்கான மாணவ,மாணவிகள் சேர்க்கையும், விளையாட்டு மையங்களில் பயிற்சி பெற 6 முதல் 8-ம் வகுப்புக்கான மாணவ, மாணவிகள் சேர்க்கையும் நடைபெற இருக்கிறது.
இதற்காக மாவட்ட அளவிலான தேர்வுப் போட்டிகள் வரும் 24-ம்தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுஆணையத்தின் விளையாட்டரங்கு களில் நடைபெற உள்ளன.
இதற்காக, இன்று (மே 16) முதல் www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய வரும் 23-ம் தேதி கடைசி நாளாகும். கூடுதல் தகவலுக்கு 9514000777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT