Published : 06 May 2023 06:20 AM
Last Updated : 06 May 2023 06:20 AM
சென்னை: கடந்த ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட ஜேஇஇ மெயின் தேர்வு முடிவு களை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. இதில் ஆலன் கரீர் இன்ஸ்டிடியூட் மாணவர்கள் மீண்டும் தங்களின் திறனை நிரூபித்துள்ளனர்.
இதுகுறித்து ஆலன் கரீர் இன்ஸ்டிடியூட் தலைவர் பிரஜேஷ் மகேஸ்வரி கூறியதாவது: ஜேஇஇ மெயின் தேர்வில் அகில இந்திய அளவில் முதல் 5 இடங்களில் 3 இடங்களை ஆலன் மாணவர்கள் கைப்பற்றியுள்ளனர். ஆலன் மாணவர்கள் ம்ருனல் ஸ்ரீகாந்த் வைரகடே, மலே கேடியா, கவுஷல் விஜய்வர்ஜியா ஆகியோர் 300-க்கு 300 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் முறையே 3, 4, 5 ஆகிய ரேங்க்-குகளை பெற்றுள்ளனர்.
அதேபோல ரித்தி மகேஸ்வரி என்ற மாணவியும் 100 சதவீத மதிப்பெண் பெற்று, தேசிய அளவில் 23-வது இடத்தையும் அகில இந்திய அளவிலான மாணவிகளில் டாப்பராகவும் வெற்றி பெற்றுள்ளார்.
ஜேஇஇ மெயின் தேர்ச்சி பட்டியலில் முதல் 100 இடங்களில் ஆலன் மாணவ, மாணவிகள் 34 பேர் இடம்பெற்றுள்ளனர். அவர்களில் 17 பேர் 100 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளனர். 22 மாநில டாப்பர்களாகவும் ஆலன் மாணவர்கள் வந்துள்ளனர். இத்தேர்வில் 22,007 ஆலன் மாணவர்கள் தேர்ச்சி பெற்று ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுக்கு தேர்ச்சி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT