Published : 21 Apr 2023 05:59 PM
Last Updated : 21 Apr 2023 05:59 PM

2016-21-ல் தமிழக அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 11,711 வகுப்பறைகள் பற்றாக்குறை: சிஏஜி ரிப்போர்ட்

பள்ளி மாணவர்கள் | கோப்புப் படம்

சென்னை: தமிழகத்தில் 2016 - 2021 வரையிலான காலக்கட்டத்தில், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 11,711 வகுப்பறைகள் பற்றாக்குறையாக இருந்தது; ரூ.2400 மதிப்பிலான பல்வேறு திட்டங்கள் திறமையற்ற செயல்பாட்டினால் பாதிக்கப்பட்டது என சிஏஜி அறிக்கையில் பல்வேறு அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

2016 - 2021 வரை தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்து சிஏஜி எனப்படும் இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை தலைவரின் அறிக்கை வெள்ளிக்கிழமை தமிழக சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

  • அரசு உயர்நிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 14.76 சதவீதம் குறைந்துள்ளது.
  • அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 11.84 சதவீதம் குறைந்துள்ளது.
  • 2,133 குடியிருப்புகளில் 5 கி.மீ சுற்றளவில் மேல் நிலைப் பள்ளிகளில் இல்லாமல் இருந்துள்ளது.
  • 1,926 குடியிருப்புகளில் 8 கி.மீ சுற்றளவில் உயர் நிலைப்பள்ளிகளில் இல்லாமல் இருந்தது.
  • தரம் உயர்த்தப்பட்ட 528 பள்ளிகளில் 515 பள்ளிகளில் விதிமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை.
  • தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் போதிய உட்கட்டமைப்பு வசதி மற்றும் ஆசிரியர்கள் இல்லை.
  • மாநில அளவில் 11,711 வகுப்பறைகள் பற்றாக்குறையாக உள்ளது.
  • இதன் காரணமாக திறந்த வெளியிலும், மரங்களின் நிழலிலும் வகுப்புகள் நடத்தப்பட்டது.
  • தற்போது வகுப்பறைகள் கட்டப்படும் வேகத்தில், அடுத்த 10 ஆண்டுகளில் கூட இந்த இடைவெளி குறையாது.
  • கட்டிட உரிமங்கள், சுகாதார சான்றிதழ்கள், தீ பாதுகாப்பு சான்றதழ்கள் இல்லாமல் பள்ளிகள் இயங்கி வந்தன.
  • ரூ.2400 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்கள் திறமையற்ற செயல்பாட்டினால் பாதிக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x