Published : 19 Apr 2023 06:21 AM
Last Updated : 19 Apr 2023 06:21 AM
சென்னை: சென்னை மாவட்ட ஆட்சியர் சு.அமிர்தஜோதி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை தரமணியில் இன்ஸ்டிட்யூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி அண்ட் அப்ளைடு நியூட்ரிஷன் நிறுவனம் செயல்படுகிறது.
இந்நிறுவனத்தில் 12-ம் வகுப்புமுடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சார்ந்தவருக்கு பிஎஸ்சி 3 வருட முழுநேர பட்டப்படிப்பு, ஒன்றரைஆண்டு முழுநேர உணவு தயாரிப்பு பட்டயப் படிப்பு, 10-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஒன்றரை ஆண்டுகள் உணவுதயாரிப்பு மற்றும் பதனிடுதல் கைவினைஞர் படிப்பு ஆகியவற்றில் சேர்ந்து படிக்க வழிவகை செய்யப்படும்.
விண்ணப்பதாரர் 10 மற்றும் 12-ம்வகுப்புகளில் குறைந்தபட்சம் 45 சதவீதமதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.
3 வருட முழுநேர பட்டப் படிப்பு (பிஎஸ்சி) பயில தேசிய தேர்வு முகமைமூலம் நடத்தப்படும் நுழைவுத் தேர்வில்(என்சிஎச்எம் ஜெஇஇ) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இந்நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி தாட்கோ மூலம் சென்னையில் வழங்கப்படுகிறது. பயிற்சி பெற விரும்புவோர் www.tahdco.com என்ற இணையதள முகவரியில் பதிவு செய்ய வேண்டும். அந்த வகையில் 2023-24-ம்ஆண்டு நடைபெறும் தேர்வுக்கு ஏப்.27-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு 044 2524 6344என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT