Published : 31 Mar 2023 03:47 PM
Last Updated : 31 Mar 2023 03:47 PM

ரூ.250 கோடியில் மாதிரிப் பள்ளிகள், ரூ.10 கோடியில் ‘வாசிப்பு இயக்கம்’ - தமிழக பள்ளிக் கல்வித் துறையின் புதிய அறிவிப்புகள்

பேரவையில் புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர்

சென்னை: மாணவர்களின் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க ரூ.10 கோடியில் மாபெரும் “வாசிப்பு இயக்கம்" தொடங்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (மார்ச் 31) பள்ளிக் கல்வித் துறை தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதன் விவரம்:

  • அரசு நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் ரூ.175 கோடி மதிப்பீட்டில் உயர் தொழில்நுட்பக் கணினி ஆய்வகங்கள்.
  • ரூ.150 கோடியில் 7500 அரசு தொடக்கப் பள்ளிகளில் திறன் வகுப்பறைகள் உருவாக்கப்படும்.
  • ரூ.250 கோடியில் அனைத்து மாவட்டங்களுக்கும் மாதிரிப் பள்ளிகள் தொடங்கப்படும்.
  • மாணவர்களின் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க ரூ.10 கோடியில் மாபெரும் “வாசிப்பு இயக்கம்" தொடங்கப்படும்.
  • ரூ.9 கோடியில் 2 விளையாட்டு சிறப்பு பள்ளிகள் தொடங்கப்படும்.
  • பிற மாநிலத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு “தமிழ் மொழி கற்போம்” திட்டம் செயல்படுத்தப்படும்.
  • நடுநிலைப் பள்ளிகளில் அனைத்துப் பாடங்களுக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கபடுவார்கள்.
  • ரூ.8 கோடியில் கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் வழங்கப்படும்.
  • ஆசிரியர்கள் அனைவருக்கும் 15 நாள் கற்றல் கற்பித்தல் மற்றும் அடிப்படை நிர்வாகப் பயிற்சிகள் வழங்கப்படும்.
  • ரூ.10 கோடியில் தொழிற்கல்விப் பாடப்பிரிவுகளுக்குத் தேவையான ஆய்வகங்கள் அமைக்கப்படும்.
  • அரசு மேல்நிலைப் பள்ளிகளில் வரலாறு, வணிகவியல் போன்ற பாடப்பிரிவுகள் இல்லாத பள்ளிகளில் படிப்படியாக 3ம் பாடப்பிரிவு உருவாக்கப்படும்.
  • அனைத்து அரசுப் பள்ளிகளிலும் உடற்கல்வி ஆசிரியர்கள் பணியிடங்கள் உருவாக்கப்படும்.
  • சிறைச்சாலைகளில் முற்றிலும் எழுதப் படிக்கத் தெரியாத 1249 சிறைவாசிகளுக்கு ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் சிறப்பு எழுத்தறிவுத் திட்டம் செயல்படுத்தப்படும்.
  • ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மனநலம் மற்றும வாழ்வியல் திறன் பயிற்சிகள் வழங்கப்படும்.
  • ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் மாநில எழுத்தறிவு விருது வழங்கப்படும்.
  • நாட்டுடைமையாக்கப்பட்ட மற்றும் அரிய தமிழ் நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்படும்.
  • ஐந்து இலக்கியத் திருவிழாக்களுடன் இணைந்து ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் இளைஞர் இலக்கியத் திருவிழாக்கள் நடத்தப்படும்.
  • ரூ. 5 கோடியில் கன்னிமாரா நூலகத்தில் நவீன வசதிகளுடன் சிறப்புப் பிரிவுகள் ஏற்படுத்தப்படும்.
  • ரூ. 76 இலட்சம் மதிப்பீட்டில் நூலகர்களுக்கு தொடர் பயிற்சிகள் வழங்கப்படும்.
  • ரூ.15 கோடியில் ஆண்டுதோறும் வாசகர்கள் வசதிக்கேற்ப நூலகங்கள் புதுப்பிக்கப்படும்.
  • ரூ.15 கோடியில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆண்டு விழா நடத்தப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x