Published : 14 Mar 2023 06:06 AM
Last Updated : 14 Mar 2023 06:06 AM
ராமநாதபுரம்: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் மற்றும் வாக்கரூ இணைந்து, ராம நாதபுரம் மாவட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு ‘நடப்பதால் உண்டாகும் நன்மை’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு போட்டிகளை நடத்தின.
இதில், 3 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வண்ணம் தீட்டுதல் போட்டியும், 6 முதல் 8-ம் வகுப்பு வரை ‘நடைப் பயிற்சியின் நன்மைகள்’ என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டியும், 9 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு ‘நம் வாழ்க்கை முறைகளில் நடைப்பயிற்சியின் பங்கும் பயனும்’ என்ற தலைப் பில் கட்டுரைப் போட்டியும் நடத் தப்பட்டன. இப்போட்டிகளில் 3 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
பள்ளி அளவில் 3 பிரிவுக ளிலும் முதல் 3 இடங்களை பிடித்தோருக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து மாவட்ட அளவில் 3 பிரிவுகளிலும் முதல் 3 இடங் களை பிடித்தோருக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
முதல் பரிசாக ரூ.1,000, 2-ம் பரிசாக ரூ.750, 3-ம் பரிசாக ரூ.500 மற்றும் சான்றிதழ்களை மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ம.காமாட்சி கணேசன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) ஷேக் மன்சூர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் விஜயகுமார், ‘இந்து தமிழ் திசை’ விற்பனைப் பிரிவு அலுவலர் எம்.பிரபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பரிசு பெற்றோர் விவரம்: வண்ணம் தீட்டுதல் (3 முதல் 5-ம் வகுப்பு வரை): பார்த்திபனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி 5-ம் வகுப்பு மாணவர் எஸ்.முகில் முதல் பரிசு, அபிராமம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி 4-ம் வகுப்பு மாணவர் வி.பிரசன்னகுமார் 2-ம் பரிசு, சூடியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி 5-ம் வகுப்பு மாணவி ஆர்.பிரனிதா 3-ம் பரிசு பெற்றனர்.
கட்டுரைப் போட்டி (6 முதல் 8-ம் வகுப்பு வரை): பெருங்குளம் பட்டம்புதூர் அரசு உயர்நிலைப் பள்ளி 8-ம் வகுப்பு மாணவி பி.சந்தியா முதல் பரிசு, அத்தியூத்து அரசு மேல்நிலைப் பள்ளி 6-ம் வகுப்பு மாணவி எம்.நூர்முபிதா 2-ம் பரிசு, அழகன்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி 8-ம் வகுப்பு மாணவர் எம்.ராகவன் 3-ம் பரிசு பெற்றனர்.
கட்டுரைப் போட்டி (9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை): சாத்தான்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 மாணவி கே.ஆர்த்தி முதல் பரிசு, பரமக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 10-ம் வகுப்பு மாணவி ஏ.அனீஷ் 2-ம் பரிசு, அத்தியூத்து அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி டி.வைஷ்ணவி 3-ம் பரிசு பெற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT