Published : 08 Feb 2023 04:33 AM
Last Updated : 08 Feb 2023 04:33 AM

‘இந்து தமிழ் திசை’, ஏபிஜெ அகாடமி நடத்தும் ‘கையெழுத்துப் பயிற்சி’ பிப்.13-ம் தேதி தொடக்கம்

சென்னை: கையெழுத்து அழகாக இருக்க வேண்டும் என்ற விருப்பம் அனைவருக்கும் உண்டு. முறையான முயற்சியோடு பயிற்சியையும் மேற்கொள்வோருக்கு கையெழுத்து அழகாக அமைந்துவிடும். அத்தகைய விருப்பத்தை நிறைவுசெய்யும் வகையில் 7 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இணையவழியில் பங்கேற்று பயன்பெறும் வகையில், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ஏபிஜெ அகாடமி உடன் இணைந்து நடத்தும் ‘கையெழுத்துப் பயிற்சி’ ஆன்லைன் நிகழ்ச்சி வரும் பிப்.13 முதல் 17-ம் தேதி வரை தொடர்ந்து 5 நாட்கள் தினமும் மாலை 6 மணி முதல் 7 மணி வரை நடைபெற உள்ளது.

இந்தக் கையெழுத்துப் பயிற்சியை கடந்த 8 ஆண்டுகளாக மாணவர்களின் திறன் மேம்பாட்டுக்காக பல பயிற்சிகளை வழங்கிவரும் ஏபிஜெ அகாடமியின் நிறுவனரும், புகழ்பெற்ற கையெழுத்துப் பயிற்சியாளருமான தேவகி பாலாஜி வழங்க உள்ளார். இவர் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பயிற்சியளித்துள்ளார். இந்தப் பயிற்சியில் 7 வயது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பங்கேற்கலாம்.

இதில் சேர்த்தெழுதுதல், கையெழுத்தில் நேர்த்தியும் தெளிவும், எழுத்துக்களை எழுதும் முறை ஆகியவை குறித்தும் பயிற்சியளிக்கப்படும். இந்தப் பயிற்சியின் முடிவில் அனைவருக்கும் அழகான கையெழுத்து அமையும். இதில் பங்கேற்க விரும்புபவர்கள் https://www.htamil.org/handwritingclass என்ற லிங்கில், நாள் ஒன்றுக்கு ரூ.100/- வீதம் ரூ.590/- மட்டும் (வரிகள் உட்பட) கட்டணமாக செலுத்தி, பதிவு செய்துகொண்டு பங்கேற்கலாம்.கூடுதல் விவரங்களுக்கு 8248751369 செல்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x