Published : 05 Feb 2023 04:25 AM
Last Updated : 05 Feb 2023 04:25 AM

கட்டிடம் பழுதடைந்ததால் கிளை நூலகம் மூடல்: படைவீட்டில் புதிய நூலக கட்டிடம் கட்டி கொடுக்க வலியுறுத்தல்

படைவீடு ஊராட்சியில் மூடப்பட்டுள்ள கிளை நூலகம்.

திருவண்ணாமலை: புத்தகங்கள்தான் ஒருவரை முழு மனிதனாக மாற்றும் என கூறிய முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் வாசகத்தை உறுதி செய்திட, படைவீடு ஊராட்சியில் மூடப்பட்டுள்ள பழுதடைந்த நூலக கட்டிடத்தை இடித்து புதிய கட்டிடம் கட்டிக் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

“ஒரு நூலகம் திறக்கப் படும்போது, நூறு சிறைச்சாலைகள் மூடப்படு கின்றன” என மேல்நாட்டு அறிஞர் விக்டர் ஹியுகோ கூறுவார். “ஒரு புத்தகம் பல மனிதனை செம்மைப் படுத்தும், நூலகங்கள் அறிவு தேடலை நிறைவு செய்கின்றன” என எழுத் தாளர்கள் கூறுகின்றனர். அதன்படி, மதுரையில் ரூ.114 கோடியில் கலைஞர் நூலகம் உருவாகி வருகிறது.

இந்த நூலகத்தின் திறப்பு விழா விரைவில் நடைபெறவுள்ளன. மதுரையில் பிரமாண்ட நூலகத்தை திறக்கும் திராவிட மாடல் ஆட்சியில், கிராமப் புறங்களில் செயல்பட்டு வரும் நூலகங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து மேம்படுத்த வேண்டும் என்ற வாசகர்களின் கோரிக்கை வலுப் பெற்றுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டம் படைவீடு ஊராட்சியில் ரேணுகாம்பாள் அம்மன் கோயில் அருகே கிளை நூலகம் செயல்பட்டு வந்தது. நூலக கட்டிடத்தின் மேற்கூரை பழுதடைந்து காரைகள் பெயர்ந்து விழுந்துள்ளன. இதனால், புதுவாழ்வு திட்ட கட்டிடத்தில், இட நெருக்கடியில் தற்காலிகமாக நூலகம் செயல்படுகிறது.

புதிய நூலக கட்டிடம் கட்டி கொடுக்க கிராம மக்களும் இளைஞர்களும் மற்றும் மாணவர்களும் வலி யுறுத்துகின்றனர். இது குறித்து சம்புவராயர் ஆய்வு மைய அறக்கட்டளை செயலாளர் முனைவர் அ.அமுல்ராஜ் கூறும் போது, “படைவீடு ஊராட்சியில் சுமார் 17 ஆயிரம் மக்கள் தொகை உள்ளது.

படைவீடு ஊராட்சிக்கு உட்பட்ட ரேணு கொண்டாபுரம் மற்றும் ராம நாதபுரம் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி, பெரு மாள்பேட்டை மற்றும் கேசவாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி, படைவீடு மற்றும் காளிகாபுரம் நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் நூலகம் இல்லை. மேலும், ஊர்புற நூலகமும் செயல்படவில்லை.

இந்நிலையில், கிளை நூலக கட்டிடத்தின் மேற்கூரை பழுதடைந்து சிமென்ட் காரை பெயர்ந்து விழுந்து சேத மடைந்துள்ளன. இதனால், ஆயிரத் துக்கும் மேற்பட்ட வாசகர்கள் வந்து சென்ற கிளை நூலகம் கடந்தாண்டு செப்டம்பர் 1-ம் தேதி மூடப்பட்டது. பின்னர், புதுவாழ்வு திட்டத்தில் உள்ள மற்றொரு பழைய கட்டிடத்தில், கிளை நூலகம் மாற்றப்பட்டது.

25 ஆயிரம் புத்தகங்களுடன் செயல்பட்டு வந்த கிளை நூலகம், சில நூறு புத்தகங்களுடன் தற்காலிக கட்டிடத்தில் இயங்குகிறது. மீதமுள்ள புத்தகங்கள், மூடப் பட்டுள்ள நூலக கட்டிடத்தில் தேக்கி வைக்கப்பட்டுள்ளன. 5 மாதங்களாக பூட்டி கிடப்பதால், புத்தகங்கள் சேத மடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

அடிப்படை வசதி இல்லை: தற்காலிகமாக செயல்படும் நூலக கட்டிடத்தில் குடிநீர், கழிப்பறை, மின்விசிறி போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. கட்டிடத்தைச் சுற்றி செடிகள் வளர்ந்து கிடக்கின்றன தற்காலிக நூலகத்துக்கு வந்து செல்லும் மாணவிகளுக்கு பாதுகாப்பில்லை. 30 ஆண்டு பழமையான கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு, இளைஞர்கள் மற்றும் மாணவர் களின் நலனில் அக்கறை கொண்டு புதிய கட்டிடம் கட்டிக் கொடுக்க, தமிழக அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

இது குறித்து மாவட்ட நூலகம் தரப்பில் கேட்டபோது, “தி.மலை மாவட்டத்தில் சேதமடைந்துள்ள நூலக கட்டிடங்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அரசுக்கு அனுப்பி வைத்துள்ளோம். சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் களின் பொது நிதியில் இருந்து தொகையை பெற்று கட்டிடம் கட்டுவதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளோம்” என்றனர். புதுவாழ்வு திட்ட கட்டிடத்தில், இட நெருக்கடியில் தற்காலிகமாக நூலகம் செயல்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x