Published : 03 Feb 2023 04:03 AM
Last Updated : 03 Feb 2023 04:03 AM

வன மரபியல், மரப்பெருக்கு நிறுவனம் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இளம் வனச்சரகர் பயிற்சி

கோவை: கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள வன மரபியல், மரப்பெருக்கு நிறுவனம் (ஐஎஃப்ஜிடிபி) சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ‘இளம் வனச்சரகர்’ என்னும் மூன்று நாள் பயிற்சி நடைபெற்றது.

இதில் கோவை மாவட்டத்தை சார்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள் 30 பேர் மற்றும் 3 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இப்பயிற்சியில் முதுமலை புலிகள் காப்பகம், யானைகள் முகாம், சோலை வனங்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மரத்தோட்டங்கள், பல்லடுக்கு வேளாண்காடு வளர்ப்பு மற்றும் காடுகளின் வகைகள் ஆகியவற்றை களப்பயணம் மூலம் மாணவர்கள் கற்றுக்கொண்டனர்.

‘வனச்சரகருடன் சந்திப்பு’ நிகழ்ச்சியில் வனச்சரக அலுவலரின் ஒருநாள் பணிகள் மாணவர்களுக்கு விளக்கப்பட்டன. வன விலங்குகளை அவற்றின் வாழ்விடங்களிலேயே காண முதுமலையில் வனச் சுற்றுலாவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. வகுப்பறை நிகழ்வில், கோத்தகிரி மலையின் குகை ஓவியங்கள், தேன் கூடுகளைத்தேடி, யானைகளின் உலகம், பரவசம் தரும் பட்டாம் பூச்சிகள், மனம் கவரும் மலையேற்றம் மற்றும் சூழல் முகாம்கள் போன்ற தலைப்புகளில் விரிவுரைகள் அளிக்கப்பட்டன.

மாணவர்கள் கலை நிகழ்ச்சிகள் மூலம் தமது கற்றல் அனுபவங்களை பகிர்ந்தனர். சான்றிதழ், பயிற்சிக் கையேடுகள், சீருடை போன்றவை மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. இப்பயிற்சியை ஐஎஃப்ஜிடிபி இயக்குநர் சி.குன்னிக் கண்ணன் தொடங்கி வைத்தார். விரிவாக்கத்துறை தலைவர் எஸ்.சரவணன், வன அலுவலர் மாதவராஜ், தொழில்நுட்ப அலுவலர்கள் பழ.சந்திர சேகரன் மற்றும் அனிதா ஆகியோர் பயிற்சியை நடத்தினர்.

சிறப்பு விருந்தினராக மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) பாண்டிய ராஜசேகரன் கலந்து கொண்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x