Published : 01 Feb 2023 01:58 AM
Last Updated : 01 Feb 2023 01:58 AM
மதுரை: பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற காவல்துறை குடும்பத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்கு மாநகர காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் பாராட்டி பரிசுத் தொகை வழங்கினார்.
மதுரை மாநகர காவல்துறையில் பணிபுரியும் காவல்துறை குடும்பத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியரின் கல்வியை ஊக்கப்படுத்தும் வகையில் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. அதன்படி 2020-21-ம் கல்வியாண்டில் பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வில் முதல் பத்து இடங்களை பெற்ற காவல்துறையினரின் குழந்தைகளுக்கு பரிசு தொகையாக முதலிடம் பெறுவோருக்கு பரிசுத்தொகை ரூ.7,500ம், இரண்டாம் பரிசாக ரூ.5,500-ம், மூன்றாம் பரிசாக ரூ.3,500 மற்றும் மீதமுள்ள மாணவர்களுக்கு தலா ரூ.2,500 பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.
அதனையொட்டி பரிசுத்தொகை வழங்கும் விழா மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மதுரை மாநகர காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் தலைமையில் நடைபெற்றது. மாணவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கிய பின்னர் மாணவர்களுடன் கலந்துரையாடினார். வாழ்க்கையில் மென்மேலும் உயர்ந்து தங்களது பெற்றோர்களுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என மாணவர்களை மாநகர காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் பாராட்டினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT