Published : 30 Jan 2023 04:05 AM
Last Updated : 30 Jan 2023 04:05 AM
கோவை: விஞ்சான் பிரசார், அறிவியல்பலகை, டாஸ், கோவை நேரு கல்விக் குழுமம் ஆகியவை இணைந்து வானவியல் குறித்த இரண்டு நாள் பயிற்சி பட்டறையை நடத்தின.
அதோடு, இதழியல், தகவல் தொடர்பியல் துறை மாணவர்கள் தமிழில் அறிவியல் நிகழ்வுகளை எப்படி எழுதுவது என்பது குறித்து கருத்தரங்கு, பயிற்சி பட்டறையும் நடைபெற்றது. மொத்தம் 2 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்வுகளில் ஒவ்வொரு துறையிலும் அனுபவம் வாய்ந்த வல்லுநர்கள் தங்களது கருத்துகளை பகிரந்து கொண்டனர்.
பயிற்சி பட்டறையின் ஒரு பகுதியாக இரவில் வால் நட்சத்திரத்தை சுமார் 1,000 மாணவர்கள் தொலை நோக்கி உதவியுடன் காணும் நிகழ்வும் நடைபெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT