Published : 02 Jan 2023 04:37 AM
Last Updated : 02 Jan 2023 04:37 AM

இளம் எழுத்தாளர்களுக்கான யுவா பயிற்சி திட்டம்: மாணவர்கள், ஆசிரியர்களுக்கு அழைப்பு

சென்னை: அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமத்தின் (ஏஐசிடிஇ) கல்விப் பிரிவு ஆலோசகர் ரமேஷ் உன்னி கிருஷ்ணன், அனைத்து விதமான உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்:

மத்திய கல்வி அமைச்சகத்தின் இளம் எழுத்தாளர்கள் ஊக்குவிப்பு திட்டம் (யுவா-2.0), ‘ஜனநாயகம்’ என்ற கருப்பொருளில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்கீழ் 30 வயதுக்கு கீழான இளம் எழுத்தாளர்கள் கட்டுரை, கவிதை, கதை, நாடகம் உட்பட பல்வேறு வடிவங்களில் எழுதுவதற்கு ஊக்குவிக்கப்படுவர்.

யுவா திட்டத்தில் தேர்வாகும் 75 பேருக்கு தேசிய புத்தக அறக்கட்டளை (என்பிடி) வழியாக 6 மாதம் சிறப்புப் பயிற்சி அளிப்பதுடன், மாதம் ரூ.50 ஆயிரம்ஊக்கத்தொகையும் வழங்கப்படும். இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு, ஜன.15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி /innovateindia.mygov.in/yuva/ என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த தகவலை அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் தங்கள் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு தெரிவித்து யுவா திட்டத்தில் பங்கேற்க அறிவுறுத்த வேண்டும். மேலும், கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x