Published : 06 Dec 2022 04:07 AM
Last Updated : 06 Dec 2022 04:07 AM

டெல்லியில் ‘ஸ்கை டைவிங்’கில் அசத்திய உதகை அரசுக் கல்லூரி மாணவி

உதகை: சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்தவர் கோகிலவாணி. இவர், நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை சுற்றுலாவியல் துறையில் மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார்.

தேசிய மாணவர் படை மாணவியான இவர், டெல்லியில் நடைபெற்ற தேசிய மாணவர் படை பாரா கேம்ப் பயிற்சியில் பங்கேற்று பிரத்யேக விமானத்தில் பயணித்து 2 கிலோ மீட்டர் உயரத்திலிருந்து பாராசூட் மூலம் குதித்து சாகசப் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

இது குறித்து உதகை அரசு கலைக்கல்லூரி என்சிசி கேப்டன் விஜய் கூறும்போது, ‘‘டெல்லி அருகே உள்ள ஆக்ராவில் பாரா முகாம், கடந்த நவம்பர் மாதம் 1-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடைபெற்றது. இம்முகாமில் பங்கேற்க தமிழகத்தை சேர்ந்த 2 மாணவர்களும், உதகை அரசு கல்லூரியை சேர்ந்த கோகிலவாணியும் தேர்வாகினர்.

தமிழகம் சார்பில் பங்கேற்ற ஒரே மாணவி இவர் தான். இது நீலகிரி, சேலம் மாவட்டங்களுக்கும், உதகை அரசு கலைக் கல்லூரிக்கும், 31 தமிழ்நாடு தனிப்பிரிவு என்சிசிக்கும் பெருமை அளிக்கக்கூடியது’’ என்றார். இம்மாணவிக்கு, தமிழ்நாடு தனிப்பிரிவு என்சிசி தலைமை அதிகாரி கர்னல் ஸ்ரீனிவாஸ், தேசிய மாணவர் படை அலுவலர் லெப்.சு.விஜய், கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x