Published : 20 Nov 2022 04:00 AM
Last Updated : 20 Nov 2022 04:00 AM

குரூப்-1 முதல்நிலைத் தேர்வு - 1.31 லட்சம் பேர் பங்கேற்கவில்லை

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்றது. சென்னை எழும்பூர் பிரெசிடன்சி பள்ளியில் தேர்வு எழுதிய பட்டதாரிகள். படம் : பு.க.பிரவீன்

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய குரூப்-1 முதல்நிலைத் தேர்வில் 1.31 லட்சம் பேர் பங்கேற்கவில்லை.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலி பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி நடத்தும் போட்டித்தேர்வுகள் மூலம் நிரப்பப்படுகின்றன. அதன்படி, துணை ஆட்சியர், கூட்டுறவு சங்க துணை பதிவாளர், வணிகவரி உதவி ஆணையர்உள்ளிட்ட குரூப்-1 பதவியில் காலியாக உள்ள 92 பணியிடங்களை நிரப்புவதற்கான முதல் நிலைத் தேர்வு, மாநிலம் முழுவதும் 1,080 மையங்களில் நேற்று நடைபெற்றது.

இதில் பங்கேற்க 3 லட்சத்து 22 ஆயிரத்துக்கு 414 பட்டதாரிகள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 1 லட்சத்து 90 ஆயிரத்து 957 பேர் (59.23 சதவீதம்) மட்டுமே தேர்வு எழுதினர். பல்வேறு காரணங்களால் 1 லட்சத்து 31 ஆயிரத்து 457 பேர் தேர்வில் பங்கேற்வில்லை. நேற்று காலை 9.30 முதல் மதியம் 12.30 மணி வரை தேர்வு நடந்தது.

வினாத்தாள் சற்று எளிதாக இருந்ததாகவும், ஆனால், வினாக்களை புரிந்து பதில் அளிக்க நேரம் போதுமானதாக இல்லை என்றும் தேர்வர்கள் பலர் தெரிவித்தனர். மேலும், தேசிய கல்விக் கொள்கை, சி.ஏ. சட்டத் திருத்தம்,ஆளுநரின் அதிகார வரம்பு உள்ளிட்ட சர்ச்சைக்குரிய விவகாரங்கள் தொடர்பான வினாக்களும் கேட்கப்பட்டிருந்தன. முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுவோர், அடுத்ததாக முதன்மைத் தேர்வை எதிர்கொள்ள வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x