Published : 06 Nov 2022 09:10 AM
Last Updated : 06 Nov 2022 09:10 AM

நாடு முழுவதும் டிச. 18-ல் கிளாட் நுழைவுத் தேர்வு

சென்னை: தேசிய கல்வி நிறுவனங்களில் சட்டப் படிப்புகளில் சேருவதற்கான கிளாட் நுழைவுத் தேர்வு, டிச.18-ம் தேதி நடைபெற உள்ளது.

நம்நாட்டில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் 22 தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் இளநிலை, முதுநிலை சட்டப் படிப்புகளில் சேர‘கிளாட்’ (Common Law Admission Test-CLAT) எனும் பொது சட்ட நுழைவுத் தேர்வில்கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி, அடுத்த கல்விஆண்டு (2023-24) மாணவர் சேர்க்கைக்கான கிளாட் தேர்வு,டிச.18-ம் தேதி நடத்தப்பட உள்ளது.

இதில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவர்கள், நவ.13-ம் தேதிக்குள் https://consortiumofnlus.ac.in/ என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக பொதுப் பிரிவினர் ரூ.4 ஆயிரம்,எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.3,500 செலுத்த வேண்டும்.மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு 2 மணி நேரம் தேர்வு நடைபெறும்.

விண்ணப்பிக்கும் வழிமுறைகள் உட்பட கூடுதல்தகவல்களை மேற்கண்ட வலைதளத்தில் அறியலாம் என்றுதேசிய சட்ட பல்கலைக்கழங்களின் கூட்டமைப்பு தலைவர்பூனம் சக்ஸேனா தெரிவித்துஉள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x