Published : 05 Sep 2022 10:19 AM
Last Updated : 05 Sep 2022 10:19 AM
இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதுமே சிந்தனைகளை விதைத்து ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கும் ஆசிரியர்கள் போற்றப்பட்டு வருகிறார்கள்.
ஆசிரியர்கள் மாணவர்களுக்கான உறவு எவ்வாறு இருக்க வேண்டும், சிறந்த ஆசிரியர்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை கிரேக்க தத்துவத்தின் மும்மூர்த்திகளான சாக்ரடீஸ் - ப்ளேட்டோ - அரிஸ்டாட்டில் உறவின் மூலம் வரலாற்றில் நாம் அறிந்திருப்போம்.
அந்த வகையில் உலக அளவில் பிரபலமான ஆசிரியர் பொன்மொழிகளை இப்பதிவில் காணலாம்.
> இயற்கைதான் மிகச் சிறந்த ஆசிரியர்- தாமஸ் கார்லைல்
> வாழ்க்கையில் வெற்றிக்கு கல்வி முக்கியமானது, அந்தவகையில் ஆசிரியர்களே மாணவர்களின் வாழ்க்கையில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள் - சாலமன் ஓர்டிஸ்
> மாணவர்களிடமிருந்து சிறந்ததை வெளிக் கொணர நல்ல ஆசிரியர்களுக்குத் தெரியும் - சார்லஸ் குரால்ட்
> நீங்கள் யாருக்கும் எதையும் கற்பிக்க முடியாது, பதில்கள் ஏற்கனவே அவர்களுக்குள் இருப்பதை மட்டுமே அவர்களுக்கு உணர்த்துங்கள் - கலீலியோ கலிலீ
> நான் உயிரோடு இருப்பதற்கு, என் தந்தைக்குக் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால், சிறப்பாக வாழ்வதற்கு என் ஆசிரியருக்குக் கடமைப்பட்டிருக்கிறேன். – அலெக்ஸாண்டர்
> ஆசிரியர்கள் கதவைத் திறக்கிறார்கள், ஆனால் நீங்கள்தான் உள்ளே நுழைய வேண்டும். - சீன பழமொழி
> யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். போதிப்பவர் எல்லாம் ஆசிரியர் அல்ல - கதே
> முழுமையான அறிவின் ஒரே அடையாளம் கற்பிக்கும் சக்தி - அரிஸ்டாட்டில்
> அறிவில் மகிழ்ச்சியை எழுப்புவது ஆசிரியரின் உயர்ந்த கலை - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
> சாதாரண ஆசிரியர் சொல்வார். நல்ல ஆசிரியர் விளக்குகிறார். உயர்ந்த ஆசிரியர் நிரூபிக்கிறார். சிறந்த ஆசிரியர் ஊக்குவிப்பார் - வில்லியம் ஏ. வார்டு
செப்டம்பர் 5 - ஆசிரியர்தினம்..
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT