Published : 13 Aug 2022 06:58 AM
Last Updated : 13 Aug 2022 06:58 AM

பிரின்ஸ் பள்ளிகள் சார்பில் அறிவியல் கண்காட்சி; மனிதகுல வளர்ச்சி அறிவியலால் மட்டுமே சாத்தியம்: மா.சுப்பிரமணியன் கருத்து

அறிவியல், கலை மற்றும் கைவினை பொருட்கள் கண்காட்சியை தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்து மாணவர்களின் படைப்புகளை பார்வையிட்டார். உடன் சோழிங்கநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.அரவிந்த் ரமேஷ், சென்னை மாநகராட்சியின் 14-வது மண்டல தலைவர் எஸ்.வி.ரவிச்சந்திரன், பிரின்ஸ் கல்வி குழுமங்களின் தலைவர் கே.வாசுதேவன் உள்ளிட்டோர்.

சென்னை: சென்னையை அடுத்த மடிப்பாக்கம் பிரின்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் பிரின்ஸ் வாரி மேல்நிலைப் பள்ளிகளின் சார்பில் நடைபெற்ற அறிவியல், கலை மற்றும் கைவினை பொருட்கள் கண்காட்சியை தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

பிரின்ஸ் கல்விக் குழும தலைவர் கே.வாசுதேவன் அறிவியல் கண்காட்சிக்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றார். துணைத் தலைவர்கள் வா.விஷ்ணு கார்த்திக், பிரசன்னா வெங்கடேசன், செயலாளர் வா.ரஞ்சனி வாசுதேவன், பள்ளி முதல்வர் கே.பி.லத்தா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

சோழிங்கநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.அரவிந்த் ரமேஷ், சென்னை மாநகராட்சி 14-வது மண்டல தலைவர் எஸ்.வி.ரவிச்சந்திரன் ஆகியோர் பிரின்ஸ் பள்ளிகளை சேர்ந்த மாணவர்களின் அறிவியல் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

கண்காட்சியை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்து 700-க்கும் மேற்பட்ட மாணவர்களின் படைப்புகளை பார்வையிட்டு பாராட்டிப் பேசும்போது, “பிரின்ஸ் பள்ளி, மாணவர்களின் தேர்ச்சியை மட்டும் நோக்கமாகக் கொள்ளாமல் அவர்கள் வாழ்வில் வெற்றி பெறத் தேவையான அனைத்து முயற்சிகளையும் சிறந்த முறையில் தொடர்ந்து செய்து வருகிறது. அறிவியலும், கலையும் பிரிக்க முடியாக ஒன்றாகும். நம் மனதில் எழும் கலை உணர்வுதான் அறிவியல் கண்டுபிடிப்புகளாக உருவாகின்றன.

மனித குலத்தின் வளர்ச்சி அறிவியலால் மட்டுமே சாத்தியம். கல்வியுடன் கூடிய அறிவியல், கலை பண்பாடுகளையும் சிறந்த முறையில் கற்று சமுதாயத்துக்கு பயனளிக்கு கண்டுபிடிப்புகளை மாணவர்கள் உருவாக்க வேண்டும்” என்று கூறினார்.

இவ்விழாவில் மாநிலக் கல்லூரி பேராசிரியர் எஸ்.ரகு, சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் ஜே.கே.மணிகண்டன், ஷர்மிளா தேவி திவாகர், ஷெர்லி ஜெய், சமீனா செல்வம் மற்றும் பிரின்ஸ் பள்ளிகளின் கல்வி ஆலோசகர்கள் கே.பார்த்தசாதி, எம்.தருமன், என்.சிவப்பிரகாசம், பி.ஆர்.ரவிராம், பேராசிரியர் ஷர்மிளா, நிவேதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x