Published : 17 Jul 2022 05:53 AM
Last Updated : 17 Jul 2022 05:53 AM

10, 12-ம் வகுப்புக்கு இணையான சான்று பெற ஐடிஐ மாணவர்களுக்கு மொழிப் பாடத் தேர்வு - விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

சென்னை: வேலைவாய்ப்பு, பயிற்சி துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மண்டல இணை பயிற்சியாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

ஐடிஐ முடித்த மாணவர்கள் 10, 12-ம் வகுப்புக்கு இணையான கல்வி சான்றிதழ் பெற, மொழிப் பாடங்களில் தேர்ச்சி அடைய வேண்டும். அதன்படி 10, 12-ம் வகுப்புகளுக்கான துணை தேர்வுகள் ஜூலை, ஆகஸ்டில் நடக்க உள்ளன.

எனவே, ஆர்வம் உள்ளவர்கள் தமிழ், ஆங்கிலப் பாடத் தேர்வுகளில் பங்கேற்க ஜூலை 17-ம் தேதிக்குள் (இன்று) சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்வுத் துறை அலுவலகங்களில் விண்ணப்பிக்க வேண்டும். மாணவர்களுக்கு இதை தெரிவிக்குமாறு அனைத்து தொழிற்பயிற்சி நிலைய முதல்வர்களுக்கும் அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x