Published : 15 Jul 2022 09:22 PM
Last Updated : 15 Jul 2022 09:22 PM

தேசிய தரவரிசைப் பட்டியலில் சிறப்பிடம்: உயர் கல்வி நிறுவனங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: 2022-ம் ஆண்டிற்கான தேசிய உயர் கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலில் தமிழகதத்தின் உயர் கல்வி நிறுவனங்கள் சிறந்த இடங்களைப் பெற்றதற்கு முதலவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் தனது சமூக வலைதளப் பதிவில், “ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் NIRF தரவரிசைப் பட்டியல் 2022-ல் தத்தமது பிரிவுகளில் தலைசிறந்த இடங்களைப் பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த உயர்கல்வி நிறுவனங்கள் அனைத்துக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

உயர் கல்வியில் திராவிட மாடலின் மாட்சிக்கு இது ஒரு சிறந்த அங்கீகாரம். அதுவும் இத்தரவரிசைப் பட்டியலானது நாம் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடும் இன்று வெளியாகியிருப்பது சாலப் பொருத்தமானது.

குறிப்பாக, இந்தியாவிலேயே மூன்றாவது சிறந்த கல்லூரி என்ற பெரிய பெருமையை நான் பயின்ற மாநிலக் கல்லூரி பெற்றிருப்பது எனக்குக் கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கிறது. இச்சாதனைக்குக் காரணமான கல்லூரி நிர்வாகத்துக்கும் ஆசிரியப் பெருமக்களுக்கும் மாணவர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். | வாசிக்க > தேசிய தரவரிசை பட்டியலின் ‘டாப்’ இடங்களில் தமிழகக் கல்லூரிகள் எத்தனை? - முழு விவரம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x