Published : 09 Jul 2022 08:03 AM
Last Updated : 09 Jul 2022 08:03 AM
வேலூர்: விஐடி பல்கலைக்கழகத்தில் பி.டெக் பொறியியல் படிப்புகளுக் கான நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
வேலூர் விஐடி பல்கலைக் கழகத்தில் நடப்பு கல்வியாண்டில் பி.டெக் பொறியியல் பட்டப் படிப்பு களுக்கான நுழைவுத் தேர்வு 123 மையங்களில் நடைபெற்றது. ஜூன் மாதம் 30-ம் தேதி தொடங்கி இம்மாதம் 6-ம் தேதி வரை கணினி வழியாக நடைபெற்ற நுழைவுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. தேர்வு முடிவுகளை www.vit.ac.in என்ற இணையதளம் வழியாக தெரிந்து கொள்ளலாம்.
விஐடி நுழைவுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். மாணவர் சேர்க்கைக்கான கவுன்சலிங் ஆன்லைன் வழியாக நேற்று (ஜூலை-8) தொடங்கி வரும் ஆகஸ்ட் 8-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. மாணவர்களுக்கான வகுப்புகள் வரும் செப்டம்பர் 2-வது வாரத்தில் தொடங்கும்.
நுழைவு தேர்வு முடிவில் தரவரிசை 1 முதல் 1 லட்சம் வரை இடம்பெற்ற மாணவர்களுக்கு விஐடி வேலூர், சென்னை, ஆந்திர பிரதேசம் மற்றும் போபாலில் படிக்க இடம் கிடைக்கும். தரவரிசையில் ஒரு லட்சத்துக்கு மேல் இடம் பெற்றவர்களுக்கு விஐடி ஆந்திரா மற்றும் போபாலில் மட்டும்தான் இடம் கிடைக்கும்.
ஜி.வி பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ்மத்திய, மாநில கல்வி வாரியம் நடத்தும் பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு விஐடியில் பிடெக் படிப்பின் 4 ஆண்டுகளும் 100 சதவீதபடிப்பு கட்டண சலுகையும், விஐடி நுழைவுதேர்வு தரவரிசையில் 1 முதல் 50 இடம் பெற்றவர்களுக்கு 75 சதவீத படிப்பு கட்டணசலுகையும், 51 முதல் 100 வரை இடம்பெற்றவர்களுக்கு 50 சதவீத படிப்பு கட்டணசலுகையும், 101 முதல் 1,000 வரை இடம்பெற்றவர்களுக்கு 25 சதவீத படிப்பு கட்டண சலுகையும் வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு, ஆந்திரா, மற்றும் மத்திய பிரதேசத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் படித்து பிளஸ் 2 தேர்வில் மாவட்ட அளவில்முதலிடம் பெறும் 1 மாணவர், 1 மாணவிக்குவிஐடியில் 100 சதவித கல்வி கட்டண சலுகையும், இலவச விடுதி வசதியும், உணவு வசதியும் விஐடி ஸ்டார்ஸ் திட்டத்தின் கீழ் சேர்க்கை வழங்கப்பட உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT