Published : 07 May 2022 06:15 AM
Last Updated : 07 May 2022 06:15 AM
சென்னை: தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த 5-ம்தேதி தொடங்கியது. இத்தேர்வை சுமார் 8.69 லட்சம்மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். மே 28-ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறுகின்றன. இந்நிலையில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி ஜூன் 1-ம் தேதி தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தேர்வுத் துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது: ஒவ்வொரு பாடத் தேர்வு முடிந்த பிறகும், மாணவர்களின் விடைத்தாள்கள் மண்டல தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லப்படும். அங்கிருந்து திருத்துதல் மையங்களுக்கு விடைத்தாள்கள் மே 28-ம் தேதிமுதல் 2 கட்டமாக அனுப்பி வைக்கப்படும்.
ஜூன் 1 முதல் 8-ம் தேதி வரை விடைத்தாள் திருத்தும்பணி நடக்க உள்ளது. இதில் சுமார் 46 ஆயிரம் முதுநிலை ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். தொடர்ந்து மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகளை முடித்து, ஏற்கெனவே திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் ஜூன் 23-ம்தேதி வெளியிடப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT