Published : 04 May 2022 11:59 PM
Last Updated : 04 May 2022 11:59 PM
புதுடெல்லி: பீடி, சினிமா, சுண்ணாம்புக்கல் மற்றும் டோலோ மைட் சுரங்கத் தொழிலில் பணிபுரியும் ஊழியர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகையை மத்திய அரசு அதிகரித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: 2022-2023 கல்வியாண்டில் மெட்ரிகுலேஷன் பள்ளிக்கல்வி பயில இருக்கும் பீடி, சினிமா, சுண்ணாம்புக்கல் மற்றும் டோலோ மைட் சுரங்கத் தொழிலில் பணிபுரியும் ஊழியர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை வீதத்தைத் திருத்தி அமைத்து, மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
அதன்படி 1-4 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உடை மற்றும் புத்தகச் செலவுக்காக ரூ.1,000-மும், 5 - 8 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ரூ.1,500-மும், 9,10ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.2,000-மும், 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.3,000-மும் உதவித்தொகை வழங்கப்படவுள்ளது.
அதேப்போல் ஐடிஐ, பாலிடெக்னிக், பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ரூ.6,000-மும் அளிக்கப்படவுள்ளது. பொறியியல், மருத்துவம், எம்பிஏ மாணவர்களுக்கு ரூ.25,000-மும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு கல்வி ஆண்டில் தேர்ச்சி பெற்றவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT