Published : 04 May 2022 05:52 AM
Last Updated : 04 May 2022 05:52 AM
சென்னை: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ஏபிஜே அகாடமி உடன் இணைந்து நடத்தும் ‘விரைவான கணிதம்’ குறித்த ஆன்லைன் பயிற்சி மே 10-ம் தேதி முதல் தொடர்ந்து 4 நாட்கள் நடைபெற உள்ளது.
பள்ளி மாணவர்களுக்குப் பயனளிக்கும் விதமாக, பல்வேறு செயல்பாடுகளை நேரடியாகவும், இணைய வழியாகவும் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ‘விரைவான கணிதம்’ குறித்த ஆன்லைன் பயிற்சியை மே 10 முதல் 13-ம் தேதி வரை நடத்துகிறது.
6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான கோடைகாலப் பயிற்சியாக நடத்தப்படும் இந்த ஆன்லைன் பயிற்சி, தினமும் மாலை 5 முதல் 6 மணி வரை நடைபெறவுள்ளது.
இந்த ஆன்லைன் கணிதப் பயிற்சியில் மாணவர்கள் வேகமாகவும் சிறப்பாகவும் கணிதங்களைக் கற்றுக்கொள்வதற்கும், கணிதத்திறனை வளர்த்தெடுக்கும் வகையிலும் பயிற்சிகள் வழங்கப்படும். இந்தப் பயிற்சியில் கணிதம் குறித்த பல்வேறு வகையான உள்ளடக்கங்கள் இடம்பெறும்.
இதில் பங்கேற்க விரும்புவோர் https://www.htamil.org/00507 என்ற லிங்க்கில் ரூ.353 பதிவுக் கட்டணம் செலுத்தி, பதிவு செய்துகொண்டு பங்கேற்கலாம். கூடுதல் விவரங்களுக்கு 8248751369 என்ற செல்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT