Published : 08 Apr 2022 06:34 AM
Last Updated : 08 Apr 2022 06:34 AM

க்யூட் தேர்வு அடிப்படையில் புதுச்சேரி பல்கலை.யில் சேர்க்கை: மே 6 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

புதுச்சேரி: ‘க்யூட்' தேர்வு அடிப்படையில் புதுச்சேரி மத்திய பல் கலைக் கழகத்தில் ஒருங்கிணைந்த முதுகலை படிப்புகளுக்கான சேர்க்கை நடக்கவுள்ளது.

இதில் படிக்க விரும்புவோர் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வரும் மே 6-ம் தேதி கடைசி நாளாகும்.

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் வழங்கும் 5 ஆண்டு ஒருங்கிணைந்த முதுநிலைப் படிப் புகளுக்கான சேர்க்கையானது தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும்.

பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு க்யூட்-யூஜி(CUET-UG) 2022-ஐ அடிப்படையாகக் கொண்டு நடைபெற வுள்ளது.

2022-23-ம் கல்வியாண்டிற்கான ஒருங்கிணைந்த முதுகலை படிப்புக்கான திட்டங்களில் சேர்க்கை பெற விரும்புவோர் க்யூட் 2022-க்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் ‘க்யூட்' தேர்வுக்கான ஆன்லைனில் விண் ணப்பிக்கலாம்.

https://cuet.samarth.ac.in/, https://www.pondiuni.edu.in/admissions-2022-23/ என்ற முகவரியில் பல்கலைக்கழக இணையதளத்தில் உள்ள தகவல் சிற்றேட்டையும் பார்க்கலாம்.

விண்ணப்பதாரர்கள் என்டிஏவின் (NTA) இணைய தளத்தை https://nta.ac.in/ மற்றும் https://cuet.samarth.ac.in/ தவறாமல் பார்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பல்வேறு ஒருங்கிணைந்த முதுநிலைப் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதி வரும் மே 6 மாலை 5 மணியாகும்.

இவ்வாறு பல்கலைக்கழக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x