Published : 23 Mar 2025 10:36 AM
Last Updated : 23 Mar 2025 10:36 AM
வண்டலூர்: மாணவர்களுக்கு படிக்கும் பழக்கம் இருந்தால் எந்த இலக்கையும் எளிதில் அடையலாம் என்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண் ராஜ் தெரிவித்தார்.
எஸ்.எஸ்.எல்.எஃப் கல்வி அறக்கட்டளை வழங்கும் 'இந்து தமிழ் திசை - வாசிப்பை நேசிப்போம்' எனும் நிகழ்வு வண்டலூரில் உள்ள பி.எஸ்.அப்துர் ரஹ் மான் கிரசண்ட் அறிவியல் மற்றும் தொழில் நுட்பக் கல்வி நிறுவன அரங்கில் நடை பெற்றது. கிரசண்ட் பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் எம்.ராஜா உசேன் அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ச.அருண் ராஜ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசியதாவது: 'வாசிப்போம் நேசிப்போம்' என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தமைக்கு 'இந்து தமிழ் திசை' நாளிதழுக்கு முதலில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் இன்றைய சூழலுக்கு, இன்றைய சமுதா யத்துக்கு இது தேவையான ஒன்று. தற் போது, நினைத்த புத்தகத்தை நினைத்த இடத்திலிருந்து நாம் வாங்கிக் கொள்ள லாம். இப்படிப்பட்ட வசதிகள் இருந்தும் பெரும்பாலானோர் இன்று புத்தகம் வாசிக் கும் பழக்கம் இல்லாமல் இருக்கின்றனர்.
அனைத்து தரப்பு மக்களுக்கும் வாசிக் கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக புத்தகத் திருவிழாக்கள் நடத் தப்படுகின்றன. பல்வேறு விழிப்புணர்வு களும் செய்யப்பட்டு வருகிறது. வாசிக்கும் பழக்கம் குறைவதற்கு காரணம் டிஜிட்டல் யுகம். படிக்கும் பழக்கம் மிகவும் தேவை யான ஒன்று. இந்தப் பழக்கத்தை வளர்த் துக் கொள்ளும்போது எந்த தேர்வையும் நாம் எளிதாக எதிர்கொள்ளலாம்; எந்த இலக்கையும் எளிதில் அடையலாம்.
தினமும் செய்தித்தாள் படிக்க வேண் டும் அல்லது உங்களுக்குப் பிடித்த புத்த கத்தை தினமும் படிக்க வேண்டும். தின மும் குறைந்தபட்சம் 15 நிமிடமாவது புத்த கத்தைப் படிக்க நேரம் ஒதுக்க வேண்டும். முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் முன்னாள் தமிழக முதல் வர் அண்ணா ஆகியோர் தினமும் புத் தகத்தைப் படித்தவர்கள்.
பேரறிஞர் அண்ணா உடல் நலம் பாதிக் கப்பட்டு வெளிநாட்டில் சிகிச்சை பெற்ற போது, அவருக்கு ஆபரேஷன் செய்ய அரங்கு தயாராக இருந்தது. அந்த நேரத்தில் மருத்துவரிடம். "நான் ஒரு புத்தகத்தை முக்கால்வாசி படித்து விட்டேன், எனக்கு சற்று நேரம் ஒதுக்கி தாருங்கள், அந்த நேரத்தில் முழுமையாக அந்தப் புத்தகத்தை வாசித்து முடித்து விடுகிறேன். அதன் பிறகு உங்கள் பணியை செய்யுங்கள்" என்று அண்ணா கூறினார்.
பணம், பதவி வரும் போகும். ஆனால், படிப்பதனால் கிடைக்கும் அறிவு உங்களிடமே இருக்கும். ஒரு காலத்தில் படிப்பதற்கு வாய்ப்பு இல்லாமல் பலர் இருந்தனர். ஆனால், தற்போது அந்த சூழல் இல்லை. எனவே, படிக்கும் பழக்கத்தை மாணவர் கள் வளர்த்துக் கொண்டு அடுத்தக்கட்டத் துக்கு சென்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
எஸ்.எஸ்.எல்.எஃப் கல்வி அறக்கட்டளை நிறுவனர் முனைவர் ஜி.சக்திவேல் பேசியதாவது: புத்தகம் படித்தால், அது நம்முடைய வாழ்க்கையை மேம்படுத்தும். வாழ்வின் அடுத்த நிலைக்குச் செல்லவும், உச்சத்தை அடையவும். புத்தக வாசிப்பு மிகவும் அவசியம். படிக்கும்போது நமக்கு தேவையானதை எடுத்துக் கொள்ள அது நமக்கு பெரிதும் உதவும். செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம், அரசு பள்ளி மாணவர்களிடையே வாசிப்பு பழக் கத்தை ஊக்கப்படுத்த பல்வேறு உதவி களைச் செய்து வருகிறது. எஸ்.எஸ். எல்.எஃப். கல்வி அறக்கட்டளை வருங் காலங்களில் மாணவர்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.
எங்கள் அமைப்பு சார்பில் வாழ்க் கையில் விளிம்பு நிலையில் உள்ள மக்களைக் கண்டறிந்து அவர்கள் முன்னேற்றுவதற் காக அனைத்து உதவி களையும் செய்து வருகிறோம். இந்தி யாவுக்கு பெரிய மாற்றத்தை நீங்கள் கொண்டுவர வேண்டும். அதற்கு புத்தகம்
படிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள் ளுங்கள், மாணவர்கள் தங்கள் பெற் றோரிடம் வாரத்துக்கு ஒருமுறையாவது குறைந்தபட்சம் 10 நிமிடங்கள் மனம்விட் டுப் பேச வேண்டும். நமது பெற்றோர் எவ் வாறு கஷ்டப்பட்டு நம்மை படிக்க வைக் கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கல்வியாளர் மற்றும் எழுத்தாளர் பேராசிரியர் ஏ.முகமது அப்துல்காதர் பேசும்போது, ”உங்கள் அறிவை விரி வடையச் செய்ய வேண்டும் என்றால் புத் தகங்களைப் படியுங்கள் என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கூறினார். படிக்கும் பழக்கத்தை மாணவர்கள் வளர்த் துக்கொள்ள வேண்டும் அதுவே உங் களை வாழ்க்கையில் முன்னேற்றத்துக்கு கொண்டு செல்லும். நாம். ஒவ்வொரு புத்தகத்தை வாசிக்கும் போதும் ஓர் புதிய அனுபவத்தை உணரலாம். அனுபவத் தின் முதல் ஆசான் புத்தகமே" என்றார்.
இந்நிகழ்ச்சியில் கிரசண்ட் பல்கலைக் கழக துணை வேந்தர் டாக்டர் முருகேசன், பேராசிரியர்கள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். 'இந்து தமிழ் திசை' நாளிதழின் முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேசன் தொகுத்து வழங்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment