Published : 12 Mar 2025 08:51 PM
Last Updated : 12 Mar 2025 08:51 PM
சென்னை: தமிழகத்தில் 6 முதல் 9-ம் வகுப்புகளுக்கான முழு ஆண்டுத் தேர்வுகள் ஏப்ரல் 8-ம் தேதி முதல் தொடங்கி நடைபெறவுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 3-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு மார்ச் 28-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. அதேபோல், 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டு மற்றும் 3-ம் பருவத் தேர்வுகள் ஏப்ரல் 9-ல் தொடங்கி 17-ம் தேதி வரை நடத்தப்படும் என பள்ளிக்கல்வித் துறை வெளியிட்ட வருடாந்திர நாட்காட்டியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில், 1 முதல் 9-ம் வகுப்புக்கு திருத்தப்பட்ட விரிவான தேர்வுக்கால அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை இன்று (மார்ச் 12) வெளியிட்டது. அதன்படி 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் ஏப்ரல் 8 முதல் 24-ம் தேதிவரை நடைபெறவுள்ளன. இதேபோல், 4, 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு 3-ம் பருவத்தேர்வுகள் ஏப்ரல் 9-ல் தொடங்கி 21-ம் தேதி வரையும், 1, 2, 3-ம் வரை பயிலும் குழந்தைகளுக்கான இறுதி பருவத்தேர்வுகள் ஏப்ரல் 15-ல் தொடங்கி 21-ம் தேதி வரை நடத்தப்படவுள்ளன. ஒவ்வொரு வகுப்புக்கும் பாடவாரியாக தேர்வு நடைபெறும் விவரங்கள் அதில் இடம் பெற்றுள்ளன.
இதுதவிர இந்த காலஅட்டவணையை பின்பற்றி உரிய வழிகாட்டுதல்களின்படி தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டுமென அனைத்துவித பள்ளிகளுக்கும் தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. கோடை விடுமுறையை பொருத்தவரை 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 22-ம் தேதி முதலும், 6 முதல் 9-ம் வகுப்புக்கு ஏப்ரல் 25-ம் தேதி முதலும் தொடங்கும. எனினும், ஆசிரியர்கள் பள்ளி இறுதி வேலைநாள் வரை பணிக்கு வரவேண்டும் என்று துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment