Published : 12 Mar 2025 03:04 PM
Last Updated : 12 Mar 2025 03:04 PM

கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க மார்ச் 15 வரை கால அவகாசம் நீட்டிப்பு

பிரதிநிதித்துவப் படம்.

சென்னை: கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க மார்ச் 15 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல மாணவ / மாணவியர்களிடம் இருந்து 2024-2025 ஆம் ஆண்டிற்கான பள்ளி மேற்படிப்பு (PM YASASVI Postmatric Scholarship For OBC's, EBC's & DNT's Students) கல்வி உதவித் தொகை கோரி விண்ணப்பங்கள் https://umis.tn.gov.in (Integration with USS Portal) என்ற இணையதளத்தில் 28.02.2025 வரை வரவேற்கப்பட்டது.

மாணவ / மாணவியர்களின் நலன் கருதியும், கல்வி உதவித்தொகை பெற தகுதியுள்ள ஒரு மாணவர் கூட விடுபடக்கூடாது என்ற நோக்கத்தோடும் 2024-2025 ஆம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க கால அவகாசம் 15.03.2025 வரை நீட்டிக்கப்படுகிறது.

அனைத்து கல்வி நிலைய முதல்வர்களும், கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட விபரத்தினை மாணாக்கர்களுக்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், நீட்டிக்கப்பட்ட கால அவகாசத்திற்குள், அனைத்து மாணாக்கர்களும் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x