Published : 26 Feb 2025 04:22 PM
Last Updated : 26 Feb 2025 04:22 PM
சென்னை: பி.இ., பட்டத்துடன் பி.எட்., முடித்தவர்கள் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிவதற்கு தகுதியானவர்கள் என்று உயா்கல்வித் துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து உயா்கல்வித் துறைச் செயலா் கே.கோபால் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: கொல்கத்தாவில் உள்ள மேற்கு வங்க தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் பி.டெக்., எலக்ட்ரிக்கல் பொறியியல் படிப்பு வேலைவாய்ப்பு வகையில் பி.இ., எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் படிப்புக்குச் சமமானது.
இதேபோல், பி.இ., படிப்பில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் பெற்றவர்கள் பி.எட்., (இயற்பியல் அறிவியல்) முடித்திருந்தால் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியராக( இயற்பியல்) பணிபுரியலாம். அந்த ஆசிரியர்கள் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடங்களை பயிற்றுவிக்க தகுதியானவர்களாவர், என்று அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment